SCHOOL MORNING PRAYER ACTIVITIES
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்
21.09.2022
திருக்குறள் :
பால்: பொருட்பால்
இயல்:குடியியல்
அதிகாரம்: கயமை
குறள் எண் : 1079
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ்.
விளக்கம்
பிறர் நன்கு உடுத்த, உண்ணக் கண்டால், அவர்மீத குற்றம் காணும் ஆற்றலை உடையவர் கயவர்.
பழமொழி :
Everything is good in it's reason.
சிறு துரும்பும் பல் குத்த உதவும்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. மகிழ்ச்சி என்பது வேண்டும் வேண்டும் என்று கேட்பதில் இல்லை போதும் என்கிற மனதில் எனவே போதும் என்கிற நிறைவோடு வாழ முயற்சிப்பேன்.
2. பெற்றோர், ஆசிரியர் மற்றும் பிறரை சரியான முறையில் மகிழ்விப்பதும் மகிழ்ச்சியே. மகிழ்விப்பேன்.
பொன்மொழி :
துன்பத்தில் விழுந்து எழுபவன் வாழ்க்கையின் எல்லை வரை இன்பம் காண்பான்.
பொது அறிவு :
1.மனித உடலில் பிராண வாயு எடுத்துச் செல்வது எது?
ஹீமோகுளோபின் .
2.குழல்கள் அற்ற சுரப்பியின் சுரப்பிற்கு என்ன பெயர்?
ஹார்மோன்.
NMMS Q 65:
Lid : Box :: Cork : ? a) Seal. b) Bottle. c) Drug. d)Carton.
செப்டம்பர் 21
சம இரவு நாள்
சம இரவு நாள்(Equinox) என்பது சூரியன் நிலநடுக்கோட்டினை கடந்து செல்லும் நாளாகும். ஆண்டுக்கு இருமுறை சூரியன் இவ்வாறு நிலநடுக்கோட்டினைக் கடப்பது நிகழும். சம இரவு நாள் இவற்றில் எந்தவொரு நாளையும் குறிக்கும். இந்நாட்களில் இரவும் பகலும் ஒரே அளவாக (ஏறத்தாழ 12 மணி நேரம்) இருக்கும்.
உலக அமைதி நாள்
உலக அமைதி நாள் (International Day of Peace) ஐக்கிய நாடுகளின் பொது அவையின் பிரகடனத்தின் மூலம் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 21-ஆம் நாளில் அனைத்து ஐநா உறுப்பு நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இன்றைய செய்திகள்
21.09.22
* தமிழகத்தில் ஃப்ளூ காய்ச்சல் பாதிப்பைத் தொடர்ந்து டெங்கு காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்துள்ளது.
* தமிழகத்தில் இன்று 1000 இடங்களில் காய்ச்சல் பரிசோதனை சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
* மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி அருகே தி.குன்னத்தூரில் 500 ஆண்டு பழமையான வளரி வீரன் சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது.
* அங்கீகரிக்கப்படாத மனைகளை பத்திரப் பதிவு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
* சியாச்சின் பனிமலையில் இணைய சேவை - செயல்பாட்டுக்கு கொண்டு வந்தது ராணுவம்.
Comments
Post a Comment