SCHOOL MORNING PRAYER ACTIVITIES 20.09.2022
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்
20.09.2022
திருக்குறள் :
பால்: பொருட்பால்
இயல்:குடியியல்
அதிகாரம்: கயமை
குறள் : 1078
சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ்.
பொருள்:
குறைகளைச் சொன்னவுடனே சான்றோரிடம் கோரி பயனைப் பெற முடியும்; ஆனால் கயவரிடமோ கரும்பை நசுக்கிப் பிழிவதுபோல், போராடித்தான் கோரிய பயனைப் பெற முடியும்
பழமொழி :
Even a King approve of wise man.
அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. மகிழ்ச்சி என்பது வேண்டும் வேண்டும் என்று கேட்பதில் இல்லை போதும் என்கிற மனதில் எனவே போதும் என்கிற நிறைவோடு வாழ முயற்சிப்பேன்.
2. பெற்றோர், ஆசிரியர் மற்றும் பிறரை சரியான முறையில் மகிழ்விப்பதும் மகிழ்ச்சியே. மகிழ்விப்பேன்.
பொன்மொழி :
உலகில் உள்ள எல்லா இதயங்களும் நல்ல இதயங்களே.. ஆனால் சந்தர்ப்பம் சூழ்நிலைகள் அதை மாற்றியமைக்கின்றன.
பொது அறிவு :
1.மார்பை பாதுகாக்கும் எலும்பின் பெயர் என்ன?
ரிபஸ்.
2.பாரமென்சியா என்றால் என்ன?
மிகச்சிறந்த ஞாபகம்.
இன்றைய செய்திகள்
20.09.22
* சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி டி.ராஜாவை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
* மானாமதுரை அருகே நிலக்கொடை குறித்த அரச முத்திரையுடன் கூடிய பிற்கால பாண்டியர் சூலக்கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
* ஈரோடு மாவட்ட மலைக்கிராமங் களைச் சேர்ந்த மாணவர்கள், பள்ளி செல்ல போதிய போக்குவரத்து வசதி இல்லாததால், பள்ளி இடைநிற்றல் அதிகரித்து வருகிறது.
* தமிழகத்தில் அக்டோபர் முதல் அரசு மருத்துவமனைகளில் புதன்கிழமையிலும், பள்ளிகளில் வியாழக்கிழமையிலும் கரோனா உள்ளிட்ட 13 வகையான தடுப்பூசிகள் போடப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
* உலகின் பெரிய வைரம் கிரேட் ஸ்டாரை திருப்பி ஒப்படைக்க இங்கிலாந்துக்கு தென்ஆப்பிரிக்கா வலியுறுத்தல்.
Comments
Post a Comment