SCHOOL MORNING PRAYER ACTIVITIES 16.09.2022
SCHOOL MORNING PRAYER ACTIVITIES
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்
( 16.09.2022)
திருக்குறள் :
பால்: பொருட்பால்
இயல்:குடியியல்
அதிகாரம்: இரவச்சம்
குறள் : 1065
தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்கினிய தில்.
பொருள்:
கூழ்தான் குடிக்கவேண்டிய நிலை என்றாலும், அதையும் தானே உழைத்துச் சம்பாதித்துக் குடித்தால் அதைவிட இனிமையானது வேறொன்றும் இல்லை
பழமொழி :
Little strokes fell great oaks.
சிற்றுளியால் மலையும் நகரும்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. "உன் திறமையோடு உன் வியர்வையும்(உழைப்பும்) சேரும் போது வெற்றி வேர்விடும்.
2. எனவே உழைத்திடு உறுதியாய். உயர்ந்திடு வானத்திற்கு.
பொன்மொழி :
மணிக்கணக்கில் உபதேசம் செய்வதை விட.. ஒரு கணப் பொழுதாவது உதவி செய்வது மேல்.
பொது அறிவு :
1.உயிர் காக்கும் உன்னத உலோகம் என அழைக்கப்படுவது எது ?
ரேடியம்.
2. இரத்தத்தில் பி எச் மதிப்பு எவ்வளவு?
7.4.
English words & meanings :
neu·ro·sci·ence - science that deals with the nervous system, noun. My cousin is an expert in neuroscience. நரம்பியல். பெயர்ச் சொல்
செப்டம்பர் 16
கி. ராஜநாராயணன் அவர்களின் பிறந்த நாள்
சர்வதேச ஓசோன் படலப் பாதுகாப்பு நாள்
இன்றைய செய்திகள்
16.09.22
# தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வரும் எச்1என்1 இன்ஃப்ளூவென்சா காய்ச்சல் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
மத்திய பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கு செப்டம்பர்-21 முதல் இலவச பயிற்சி தொடக்கம்: பட்டதாரிகள் முன்பதிவு செய்து வகுப்பில் பங்கேற்கலாம்.
# தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
பெண்கள் டி20 கிரிக்கெட்: ஸ்ம்ரிதி மந்தனா- ஷபாலி வர்மா ஜோடி புதிய சாதனை.
Prepared by
ICT WOMENS KOVAI
Comments
Post a Comment