SCHOOL MORNING PRAYER ACTIVITIES
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 15.09.2022
திருக்குறள் :
பால்: பொருட்பால்
இயல்:குடியியல்
அதிகாரம்: இரவச்சம்
குறள் : 1064
இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்
காலும் இரவொல்லாச் சால்பு.
பொருள்:
வாழ்வதற்கு ஒரு வழியும் கிடைக்காத நிலையிலும் பிறரிடம் கையேந்திட நினைக்காத பண்புக்கு, இந்த வையகமே ஈடாகாத அளவுக்கு பெருமையுடையது.
பழமொழி :
It is most blessed to give than to receive.
ஏற்பதைவிட இடுவது சிறப்பு.
இரண்டொழுக்க பண்புகள் :
1. "உன் திறமையோடு உன் வியர்வையும்(உழைப்பும்) சேரும் போது வெற்றி வேர்விடும்.
2. எனவே உழைத்திடு உறுதியாய். உயர்ந்திடு வானத்திற்கு.
பொன்மொழி :
உலகில் எப்படி வாழ்வது என்பதையாவது தெரிந்து கொள்ளும் அளவிற்கு உன்னை நீயே அறிந்து கொள்; அதுவே வாழ்க்கையில் நீ அடையத்தக்க பெரும் பேறு.
பொது அறிவு :
1.தனது உடம்பினை விட நீளம் கூடிய நாக்கை கொண்ட விலங்கு எது?
பச்சோந்தி .
2.ஆப்பிரிக்கா கண்டத்தில் மட்டும் பரவலாக வாழும் விலங்கு எது?
வரிக்குதிரை.
செப்டம்பர் 15
அனைத்துலக சனநாயக நாள்
இன்றைய செய்திகள்
15.09.22
* அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 127 தமிழக காவல்துறை, சீருடை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் “சிற்பி” திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
குழந்தைகளுக்காக பிரத்யேகமாக இயங்கும் சைல்ட்லைன் 1098, கடந்த 26 ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கி வரும் நிலையில் இந்த எண்ணை மத்திய அரசு சிங்கிள் ஹெல்ப்லைன் எண்ணான 112வுடன் இணைத்துள்ளது.
Prepared by
Covai women ICT_போதிமரம்
Comments
Post a Comment