தமிழகத்தில் இன்புளுயன்சா காய்ச்சல்
தமிழகத்தில் விடுமுறைக்கு வாய்ப்பில்லை
தகுதியுள்ள அனைவரும் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
அனைத்து மருத்துவ கட்டமைப்புகளிலும் புதன்கிழமை தடுப்பூசி போடப்படும்.
60 வயதுக்கு மேற்பட்டோருக்கான பூஸ்டர் இலவச தடுப்பூசி திட்டம் தொடருமா என்பது விரைவில் தெரியவரும்.
அக்டோபர் மாதத்தில் இருந்து ஒவ்வொரு வியாழக்கிழமையும் அனைத்து பள்ளிகளிலும் கொரோனா தடுப்பூசி போடப்படும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
தமிழகத்தில் இன்புளுயன்சா காய்ச்சல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் சூழல் இல்லை.
1044 பேருக்கு இன்புளுயன்சா காய்ச்சல் உள்ளது.
பள்ளிகளுக்கு தற்போது விடுமுறை அளித்தால் மாணவர்களின் கல்வி பாதிக்கும்.
பருவகாலத்தில் வரும் காய்ச்சல் என்பதால் மக்கள் பீதியடைய தேவையில்லை.
முகக்கவசம், தனிமனித இடைவெளி கிருமிநாசினி பயன்பாட்டை மக்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.
காய்ச்சல் பாதிப்பு இருந்தால் பிள்ளைகளை பெற்றோர் பள்ளிக்கு அனுப்புவதை தவிர்க்கலாம் -அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
Comments
Post a Comment