TAMIL NEWS UPDATES
TAMIL NEWS UPDATES 25 APRIL 2022
*தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கை மீதாக விவாதம் நடந்து வருகிறது. இன்று (திங்கட்கிழமை) வனம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடக்கிறது. முதலில் காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியதும், கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது. கேள்வி நேரம் முடிந்ததும் மானியக் கோரிக்கை விவாதம் தொடங்குகிறது.*
***********
*இரண்டாவது முறையாக பிரான்ஸ் அதிபராகிறார், இமானுவேல் மேக்ரான்*
**************
*9 மணி நேரப் போராட்டம் - தடம் புரண்ட ரெயில் பெட்டிகளை மீட்ட ரெயில்வே ஊழியர்கள்*
*************
*குரூப் 4 தேர்வுக்கு இதுவரை 13.17 லட்சம் பேர் விண்ணப்பம்*
*தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 28-ம் தேதி வரை அவகாசம்*
*VAO, JA என்று 7,301 பணியிடங்களுக்கு ஜூலை 24-ல் எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது.*
***********
*CUET பொது நுழைவுத் தேர்வு; தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு மத்திய கல்வி அமைச்சர் கடிதம்*
*➤பொது நுழைவுத் தேர்வு மாநிலங்களின் உரிமைகளின் தலையிடவில்லை*
*➤கல்வி பொதுப்பட்டியலில் உள்ளதால், அதை மேம்படுத்தும் பணி மத்திய அரசுக்கும் உண்டு.*
*➤கல்லூரிகள், உயர்கல்வி நிறுவனங்களில் சேர தனியாக பயிற்சி எடுப்பதையும், கூடுதல் செலவையும் தடுத்துள்ளது CUET*
*➤CUET தேர்வுக்கு இதுவரை 3.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்; விண்ணப்பிக்கும் அவகாசம் மேலும் நீட்டிக்கப்படும்.*
*➤12-ம் வகுப்பு பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டே UG படிப்புகளுக்கான CUET தேர்வு நடத்தப்படுகிறது.*
************
*10, 11, 12ம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வுகள் இன்று தொடக்கம்.*
*தமிழகம் முழுவதும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கின்றனர்.*
**********
*தமிழ்நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் தினசரி கொரோனா பாதிப்பு; ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை!*
************
*ரயில் விபத்துக்கு ஓட்டுநரின் கவனக்குறைவே காரணம் என முதற்கட்ட விசாரணையில் தகவல்!*
************
*சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் புறநகர் மின்சார ரயில் விபத்துக்குள்ளான சம்பவத்தில் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு!*
*சென்னை கடற்கரை ரயில் நிலைய கண்காணிப்பாளர் புகார்*
**********
*கடும் பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் இலங்கையில் இருந்து மேலும் 15 பேர் தனுஷ்கோடி வருகை!*
Comments
Post a Comment