ENNUM EZHUTHUM TRAINING 2022
எண்ணும் எழுத்தும் பயிற்சி 2022
Image courtesy : edxlive.com
தமிழ்நாட்டில் 1 முதல் 5 வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் ஆன்லைன் பயிற்சி 9 கட்டகங்களாக SCERT ஆல் உருவாக்கப்பட்டு உள்ளது.
இதனை ஆன்லைன் வாயிலாக ஆசிரியர்கள் பயிற்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது.பயிற்சி தேதி மற்றும் மேலும் விவரங்களுக்கு PDF வடிவில் பகிர்ந்துள்ளோம்.
*Online பயிற்சி குறித்த விளக்கம்:* 👉 பயிற்சி TNEMIS appல் அல்ல. TNTP website.ல் 👉 Trs.log in சென்று dashboardல் தமிழில் எண்ணும் எழுத்தும் என இருக்கும். 👉 அதை Click செய்தால் வீடியோ இருக்கும். அதன் பின் Questions இருக்கும். 👉 அதை படித்து Save கொடுத்தால் Completed என வரும். 👉 ஒவ்வொரு கட்டகம் முடிக்கவும் 2 or 3 நாட்கள் time உள்ளது. 👉 எனவே எப்போது வேண்டுமானாலும் முடிக்கலாம். எந்த time லும் attend செய்யலாம் 👉 மாலை நேரத்தில் வீட்டில் கூட இதை முடிக்கலாம். *எண்ணும் எழுத்தும் திட்டத்தின் மிக முக்கிய நோக்கம்:* 👉 மூன்றாம் வகுப்பு அல்லது எட்டு வயதுக்குள் அனைத்து மாணவர்களும், 💥 தமிழ் மொழியில் உள்ள பாடப் பகுதியை ( பாடங்கள் மட்டுமின்றி கதைகள் மற்றும் கட்டுரைகளை ) தங்கு தடையின்றி விரைவாகவும், பிழையின்றியும், பொருள் உணர்ந்து புரிந்து வாசிக்கும் திறனை பெற்றிருக்க வேண்டும். 💥 ஆங்கிலத்தில் நன்கு வாசிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். 💥 கணிதப் பாடத்தில் அடிப்படை கணித செயல் பாடுகளான கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல், எண் மதிப்பு, இட மதிப்பு , அளவைகள், வடிவியல் சார்ந்த கருத்துகளில் முழுமையான அடைவை பெற்றிருத்தல். 💥 இந்த இலக்கை 2025 ஆம் ஆண்டிற்குள் அடைய வேண்டும். 💥 திட்ட காலம் 2022-25 வரை. 💥 4 மற்றும் 5 ஆம் வகுப்புகளில் மாணவர்களின் படைப்பாற்றல் திறன் வெளிப்பட வேண்டும். இந்த இலக்கை நோக்கியே பயிற்சியும், பள்ளிச் செயல்பாடுகளும் அமைய உள்ளதாகத் தெரிகிறது. ENNUM EZHUTHUM TRAINING
Comments
Post a Comment