TNPSC ANNUAL PLANNER 2022
TNPSC ANNUAL PLANNER 2022
TNPSC தலைவரின் இன்றைய பேட்டியின் சுருக்கம்.
TNPSC குரூப் 2, 2a பணிக்கான தேர்வு குறித்த அறிவிப்பு பிப்ரவரி மாதம் வெளியிடப்படும். அதேபோல், குரூப் 4 பணிக்கான அறிவிப்பு மார்ச் மாதம் வெளியிடப்படும். இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்ட 75 நாட்கள் கழித்து தேர்வுகள் நடைபெறும். இதனுடன் 32க்கும் மேற்பட்ட வகை துறைகளுக்கு தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
குரூப்-4 பணியிடங்களில் 5255 இடங்கள் தற்போது காலியாக உள்ளன. மேலும் 3000 பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இதேபோல் குரூப் 2, 2ஏ பணியிடங்கள் 5831 காலி பணியிடங்கள் காலியாக உள்ளன.
இத்தேர்வுகளுக்கான பாடத்திட்டம் ஒரு வாரத்திற்குள் தயாராகிவிடும். அதனைத் தொடர்ந்து பாடத்திட்டங்கள் இணையதளத்தில் வெளியிடப்படுவதோடு மாதிரி வினாத்தாள் வெளியிடப்படும்.
டிஎன்பிஎஸ்சி நடத்திய தேர்வுகளில் குளறுபடி ஏற்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பியதற்கு இனி இதுபோன்ற தவறுகள் நடக்காத படி பல்வேறு புதிய முறைகளை கொண்டு வந்துள்ளோம். உதாரணமாக ஓஎம்ஆர் மற்றும் தேர்வர்களின் சுயவிவரங்களை தனியாக குறிப்பிட்டு, அதை பாதுகாப்பாக கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறோம். இதன் மூலம் சம்பந்தப்பட்டவரின் ஓஎம்ஆர் விடைத்தாளை எடுத்து திருத்த முடியாது. இது டிஜிட்டல் மயமாக்கப்பட்டு உள்ளது.
வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு இப்போதைய டிஎன்பிஎஸ்சி அறிவிப்புக்கு செல்லாது. இதற்கு முன்பு இரண்டு தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. அதைத் திருத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அதிலும் 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டை பின்பற்ற தேவையில்லை என தெரிவித்துள்ளோம். அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஜனவரி மாதத்தில் உச்ச நீதிமன்றத்திலிருந்து வரும் தீர்ப்பை பொறுத்து அடுத்த கட்ட நடைமுறை மேற்கொள்ளப்படும்.
தேர்வு முடிவுகள் வெளியிடப்படிவதற்கு முன் Final answer key வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்.
ஓ.எம்.ஆர் விடைத்தாளில் இருந்து மாற்று ஏற்பாடாக கணினி வழி தேர்வை நடத்துவது குறித்து திட்டமிட்டு தற்போது அரசு பணிகளில் துறை தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது அதில் கணினி வழித் தேர்வு நடைமுறை பின்பற்றப்படுகிறது இதே வழியைப் பின்பற்ற தேர்வுகளுக்கும் பின்பற்றலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
தமிழ் மொழித்தாள் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் 40 மதிப்பெண்களுக்கும் மேல் பெறக்கூடிய மதிப்பெண்கள் அனைத்தும், பிற தேர்வுகளுக்கான மதிப்பெண்களுடன் சேர்த்துக் கணக்கிடப்படும்.
குரூப் 1, குரூப் 2 தேர்வுகளில் தமிழ்வழியில் முதன்மைத் தேர்வு எழுதுபவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்ற தேர்வர்களின் குற்றச்சாட்டுகளை களைய தனி கவனம் செலுத்தப்படும்.
பாலசந்திரன், தலைவர், TNPSC
Comments
Post a Comment