TAMIL NEWS HEADLINES TODAY
TAMIL NEWS HEADLINES TODAY
19 NOVEMBER 2021
இன்றைய ( 19.11.2021) செய்திகள்...
வேளாண் சட்டங்கள் திரும்ப பெற முடிவு
மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற முடிவு செய்திருக்கிறோம்-நாட்டு மக்களுக்கு ஆற்றும் உரையில் பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு.
வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படுகிறது
*********
விவசாயிகள் தங்கள் போராட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும்- பிரதமர்.
போராட்டம் செய்து வரும் விவசாயிகள் வீடுகளுக்கு செல்லுமாறு பிரதமர் மோடி வேண்டுகோள்.
இந்த மாதம் தொடங்க உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் முறைப்படி 3 வேளாண் சட்டங்களும் திரும்பப்பெறப்படும்.
*********
அதிக மழை
24 மணி நேரத்தில் திண்டிவனத்தில் அதிகபட்ச கனமழை
கடந்த 24 மணி நேரத்தில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் 22செமீ மழை பதிவு
மேலும் 19 இடங்களில் 10செமீ மேல் மழை பதிவு
********
கரையை கடந்தது
அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது
- வானிலை ஆய்வு மையம்
********
*தாயகத்திற்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் முதலிடம் - உலக வங்கி*
**********
*இன்னுயிர் காப்போம் திட்டம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!*
*சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கான முதல் 48 மணி நேர உயிர் காக்கும் உயர் சிகிச்சைகளை தமிழ்நாடு அரசே இலவசமாக வழங்கும் என அறிவிப்பு!*
*இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 81 மருத்துவ சிகிச்சைகளை அளிக்க முடிவு!*
***********
*காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் முழுமையாக கரையை கடந்தது; வட மேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவிழக்கக்கூடும், ரெட் அலர்ட் விலக்கிக் கொள்ளப்படுகிறது”*
*-தென் மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் பாலச்சந்திரன்*
Comments
Post a Comment