TAMIL NEWS HEADLINES TODAY
TAMIL NEWS HEADLINES TODAY
இன்றைய ( 18.11.2021 ) செய்திகள்
*சென்னை மெரினாவில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதித்தது காவல்துறை*
**********
*ஆடைக்கு மேல் தொட்டு பாலியல் தொல்லை தந்தால் போக்சோ போட முடியாது என்ற நாக்பூர் உயர்நீதிமன்ற பெஞ்ச் தீர்ப்பு ரத்து: 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி. குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவிப்பு*
*********
*காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட தமிழகம் ஆந்திரா இடையே நாளை கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு*
*காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையிலிருந்து 310 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது*
***********
*உயர் கல்வி மாணவர்களின் கோரிக்கையினை ஏற்று இணைய வழியில் (online) தேர்வினை தொடர்ந்து நடத்திட வேண்டும் என தமிழக அரசுக்கு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்*
**********
*பரணி தீபம் ஏற்றும் நிகழ்வில் கிரிவலத்திற்கு உள்ளூரை சேர்ந்த 5 ஆயிரம் பேர் மற்றும் வெளியூரை சேர்ந்த 15 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்கலாம் எனவும், ஆனால் கோவிலுக்குள் அனுமதிக்க வாய்ப்பில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.*
**********
*பிப்ரவரி 2025-க்குள் யமுனை நதியை சுத்தம் செய்ய ஆறு அம்ச செயல் திட்டத்தை செயல்படுத்துவோம்.!*
*- டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்*
***********
*திருவண்ணாமலையில் இன்றும் நாளையும் கிரிவலம் செல்ல 20,000 பக்தர்களை அனுமதிக்கலாம்*
*திருக்கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு அனைத்து பக்தர்களையும் அனுமதிக்கக் கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பதில்*
**********
*பொங்கல் திருநாளை முன்னிட்டு அளிக்கப்பட்டு வந்த நிதியுதவியான 2,500 ரூபாயை தொடர்ந்து அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்"*
*திரு.ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை.*
************
*செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 444 ஏரிகள் கன மழை காரணமாக முழு கொள்ளளவை எட்டியது*
***********
*திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 76 ஏரிகள் முழுமையும் நிரம்பின*
************
*கோவையில் வரும் 23 ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் முதலீட்டு மாநாடு*
*சிறு,குறு நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் நிதி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான ( Fintech ) புதிய கொள்கையையும் அன்று வெளியிடப்படுகிறது.*
***********
*காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது: மழையின் தீவிரம் அதிகரிக்கும் என தகவல்*
*காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்போது மழையின் தீவிரம் மேலும் அதிகரிக்கக்கூடும். தெற்கு ஆந்திரா - வட தமிழக கடற்கரை நோக்கி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நகர்ந்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.*
************
*கனமழை காரணமாக தமிழகத்தில் இதுவரை 20 மாவட்டதில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது*
***********
*ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக புகார்;*
*முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு.*
***********
*2021ம் ஆண்டில் முதல் முறையாக 141 அடியை எட்டியது முல்லை பெரியாறு அணை;*
*நவம்பர் 30 ஆம் தேதி முதல் 142 அடியாக நீரை தேக்கிக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.*
**********
*சுடுகாட்டில் உடல்களை எரிக்கும்- மயான பணியாளர்களை முன்களப்பணியாளர்களாக அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.*
Comments
Post a Comment