TAMILNADU NEWS HEADLINES 25.09.2021
இன்றைய தலைப்புச் செய்திகள்
வங்கக் கடலில் குலாப் புயல் உருவாகிறது- சென்னை வானிலை மையம்.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்று நாளை மாலை கரையை கடக்கும்.
தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் புயலாக வலுபெறும்.
குலாப் புயல் நாளை மாலை கரையை கடக்கும்.
வடமேற்கு திசையை நோக்கி நகரும் இந்த குலாப் புயல் ஒடிஸா- ஆந்திரா இடையே கரையை கடக்கும்.
குலாப் என்ற பெயர் பாகிஸ்தானால் பரிந்துரைக்கப்பட்டதாகும்.
குலாப் என்றால் இந்தியில் ரோஜா மலர் என பொருள்.
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
“ஆன்லைன் விளையாட்டுக்கள் பேரழிவைத் தரும்”-பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை:
ஆன்லைன் விளையாட்டுக்களிலிருந்து பள்ளி மாணவர்களை காப்பதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை.
மாணவர்களின் தேர்ச்சி நிலை மற்றும் பழக்கவழக்கங்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
ஆன்லைன் கல்வியும், ஆன்லைன் விளையாட்டுகளும் இன்றியமையாத ஒன்றாகிவிட்ட நிலையில், அதிலிருந்து பள்ளி மாணவர்களை பாதுகாக்க வேண்டும்.
மாணவர்கள் எந்த ஆப்-களை உபயோகிக்கிறார்கள், எந்த ஆப்-ல் அதிக நேரம் செலவிடுகின்றனர் என்பதை கண்காணிக்க வேண்டும்.
தனி நபர் தகவல் பரிமாற்றம் செய்ய அனுமதிக்கக் கூடாது. ஆப்-களை விலைக்கு வாங்க அனுமதிக்கக் கூடாது.
பெற்றோர்களின் டெபிட்/கிரெடிட் கார்டுகள், OTP-ஐ பிள்ளைகள் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது.
ஆண்டிவைரஸ், ஸ்பைவேர் மென்பொருள்களை Install செய்துகொள்ள வேண்டும்.
இணையதளத்திலோ, அப்ளிகேஷனிலோ ஏதேனும் விபரீதமாக நிகழ்ந்துவிட்டால் உடனடியாக ஸ்க்ரீன்ஷாட் எடுத்து அதை ரிப்போர்ட் செய்ய வேண்டும்.
மாணவர்கள் Adult App/Website பயன்படுத்துகிறார்களா? என்பதைக் கண்காணித்து அதை தடுத்து உரிய கவுன்சிலிங் வழங்க வேண்டும்.
மாணவர்கள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாவதை தடுத்து, படிப்பில் கவனம் செலுத்த ஏதுவாக பெற்றோர்கள் முயற்சி எடுக்க வேண்டும்.
மாணவர்களின் நடத்தையில் ஏதும் வித்தியாசம் தென்பட்டால் உடனடியாக செல்போன், மடிக்கணினி, கணினிகளை சோதித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெற்றோர்கள், ஆசிரியர்களிடத்தில் ஆன்லைன் விளையாட்டுகளின் விபரீதம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு.
மத்திய பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவைப் பின்பற்றி, அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை.
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
பாடகர் எஸ்.பி.பியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று:
1969ல் சுசிலாவுடன் இணைந்து, 'இயற்கை என்னும் இளைய கன்னி...' எனும் முதல் பாடலை பாடினார்.
இப்படம் வெளிவரும் முன், 1969 மே 1ல் எம்.ஜி.ஆரின், அடிமைப்பெண் படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் பி.சுசிலாவுடன் இவர் பாடிய 'ஆயிரம் நிலவே வா...' பாடல், 'ஹிட்' ஆனது.
இது தமிழில் இவரது முதல் பாடலாக அமைந்தது.
நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், 'டப்பிங் ஆர்டிஸ்ட்' என அனைத்திலும் முத்திரை பதித்த சாதனையாளர்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உட்பட 16 இந்திய மொழிகளில் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்தவர்.
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
டாஸ்மாக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
சுற்றுச்சூழல் துறை அனுமதியின்றி மண் எடுக்க அரசு அனுமதி:
சுற்றுச்சூழல் அனுமதியின்றி,மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று 1.5 மீட்டர் வரை மண் எடுக்கலாம்.
மண்பாண்ட தொழிலாளர்கள் சுற்றுச்சூழல் அனுமதியின்றி மண் எடுக்கலாம் என்ற அறிவிப்பை அரசாணையாக வெளியிட்டது தமிழக அரசு.
Comments
Post a Comment