TAMILNADU NEWS HEADLINES 22.09.2021
இன்றைய தலைப்புச் செய்திகள்
ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பல கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றது அம்பலம்.
விதிகளை மீறி பெறப்பட்ட நகைக்கடன் - தொகையை வசூலிக்க தமிழக அரசு உத்தரவு.
ஒரே குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் பல கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றிருப்பது கண்டுபிடிப்பு - தமிழக அரசு.
5 சவரனுக்கு அதிகமாக நகைக்கடன் பெற்றவர்களிடம் இருந்து நகைக்கடன்களை வசூல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கவும்.
நகைக்கடன்களின் தவணையை கட்ட தவறியவர்கள் மீது உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசு உத்தரவு.
அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை.
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு.
இதுவரை 64,299 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது.
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
கொரோனா 3வது அலை பல நாடுகளில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
தடுப்பூசி கண்டுபிடித்த பின்னர் வந்துள்ள கொரோனா 3வது அலை உலக வல்லரசு நாடுகளையே நிலைகுலைய செய்து வருகிறது.
அமெரிககா, ரஷ்யா, இங்கிலாந்து, ஈரான், பிரேசில் உள்பட பல்வேறு நாடுகளில் தீவிரமாக பரவ தொடங்கி உள்ளது.
டெல்டா, ஆல்பா போன்ற வைரஸ்களால் கடும் பாதிப்புகளை இந்த நாடுகள் சந்தித்து வருகின்றன.
உலகிலேயே கொரோனாவின் தீவிரத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா.
அங்கு நேற்று முன்தினம் ஒரே நாளில் 76,599 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர்.
ஆனால் நேற்று அந்த எண்ணிக்கை 117,989 ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக தினசரி பாதிப்பு இங்கிலாந்தில் அதிகமாக உள்ளது.
இங்கிலாந்துக்கு அடுத்தபடியாக தினசரி பாதிப்பு துருக்கியில் அதிகமாக உள்ளது.
துருக்கிக்கு அடுத்தபடியாக தினசரி பாதிப்பு இந்தியாவில் அதிகமாக உள்ளது.
நன்றி : செய்திக்கதிர்
Comments
Post a Comment