TAMILNADU NEWS HEADLINES 20 SEP 2021
TAMILNADU NEWS HEADLINES
TAMILNADU NEWS HEADLINES 20.09.2021
அரசுப் பள்ளிகளில் படித்து 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களின் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், கலந்தாய்வு கட்டணம் ஆகிய அனைத்தையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்ளும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
11000 ஏழை மாணவர்கள் இதன்மூலம் பயன்பெறுவார்கள்.
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
தமிழகம் முழுவதும் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
வேளாண் சட்டங்கள், பெட்ரோல் - டீசல் விலை உயர்வு, தனியார்மயமாக்கல் உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த 7 மாதகாலம் அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தொடர்ந்த வழக்கு.
“கால அவகாசம் வழங்க முடியாது” என தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு திட்டவட்டம்.
சட்டமன்றத் தேர்தலை நடத்திய தமிழ்நாட்டில், உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில் என்ன பிரச்னை?- தலைமை நீதிபதி அமர்வு கேள்வி.
சில மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன; ஆகவே, 7 மாதகாலம் அவகாசம் கேட்கிறோம், தற்போது அவ்வளவு கூட தேவையில்லை, 3-4 மாதகாலம் அவகாசம் வழங்கினால் கூட போதுமானது-மாநில தேர்தல் ஆணையம் கோரிக்கை.
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
கூடுதல் தடுப்பூசி - முதல்வர் கடிதம்:
தமிழகத்திற்கு வாரம்தோறும் 50 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்க கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் - முதலமைச்சர்.
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2ம் தேதி பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவு.
ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் கிராமசபை கூட்டங்கள் நடத்த அனுமதி.
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
ரஷிய பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு: 8 மாணவர்கள் உயிரிழப்பு.
பெர்ம் மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் இன்று காலை வகுப்புகள் நடைபெற்று வந்தபோது அடையாளம் தெரியாத ஒருவர் வகுப்பறைக்குள் புகுந்து அங்கிருந்த மாணவர்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் சிக்கி இதுவரை 8 மாணவர்கள் பலியாகியுள்ளனர்.
8 க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர்.
மேலும், சிலர் துப்பாக்கிச் சூட்டிலிருந்து தப்பிக்க வகுப்பறை ஜன்னல் வழியாக வெளியே குதித்ததில் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை கைது செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்றி : செய்திக்கதிர்
Comments
Post a Comment