TODAY TAMIL NEWS | TODAY TAMIL NEWS HEADLINES 26 JUNE 2021
TODAY TAMIL NEWS
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
"6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு.
சென்னையில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்...
TOP 100 MEDICAL COLLEGE'S
✨புகழ்பெற்ற CEOWORLD இதழ் வெளியிட்ட உலகின் தலை சிறந்த 100 மருத்துவக் கல்லூரிகளில் தமிழகத்தை சேர்ந்த மதராஸ் (சென்னை) மருத்துவக் கல்லூரி (MMC), வேலூர் கிறித்துவ மருத்துவக் கல்லூரி ஆகியவை இடம் பிடித்து சாதனை!
இந்த பட்டியலில் இந்தியாவை சேர்ந்த 6 மருத்துவக் கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன
புதுதில்லி AIIMS - 23 வது இடம்
புனே ஆயுதப்படை மருத்துவக் கல்லூரி - 34
கிறித்துவ மருத்துவ கல்லூரி வேலூர் - 49
புதுச்சேரி JIPMER - 59
மதராஸ் மருத்துவக் கல்லூரி (MMC) - 64
பனாரசு இந்து பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி வாரணாசி - 72
இந்த பட்டியலில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரே கல்லூரி MMC மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
https://ceoworld.biz/2021/03/21/best-medical-schools-in-the-world-for-2021/
பரிசுத்தொகை அறிவிப்பு
ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு அரசு சார்பில் ரூ.3 கோடி வழங்கப்படும்.
வெள்ளி பதக்கம் வென்றால் ரூ.2 கோடியும், வெண்கல பதக்கம் வென்றால் ரூ.1 கோடியும் வழங்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Comments
Post a Comment