இன்றைய முக்கிய செய்திகள் 24 மே 2021 | TAMIL LATEST NEWS UPDATES
இன்றைய செய்தித் துளிகள்
---------------------------------------------------------------------------
📕📰 ஆன்லைன் வகுப்பில் இருக்கும் ஆசிரியர்கள் கண்ணியமாக உடை அணிந்து பாடத்தை நடத்த வேண்டும்..!
பிஎஸ்பிபி ஆசிரியர் தவறான உடையணிந்து சம்பவம் குறித்து விசாரிக்கப்படும்..!
கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ்
-------------------------------------------------------------------------
📕📰 கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சைக்குப் பிறகு, இந்தியாவில் மஞ்சள் பூஞ்சை தொற்று காசியாபாத்தில் கண்டறியப்பட்டுள்ளது..!
------------------------------------------------------------------------
தமிழகத்தில் கடும் கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு அமலானது:
கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
மருத்துவம் மற்றும் இறப்புகளுக்காக மட்டும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவுடன் அனுமதிக்கப்படும்.
மருந்து கடைகள், வேளாண் இடு பொருட்கள் விற்பனை நிலையங்கள் மட்டும் திறக்க அனுமதி.
வாகனங்களில் தேவையின்றி ஊர் சுற்றினால் அபராதம் விதிக்கப்படும் என அறிவிப்பு.
-----------------------------------------------------------------------
வங்கக்கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
இந்த புயலுக்கு ‘யாஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது.
யாஸ் புயல் வடமேற்கு திசை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது.
இந்த புயல் ஒடிசா மேற்கு வங்கம் இடையே 26ஆம் தேதி கரையைக் கடக்கும் என அறிவிப்பு.
---------------------------------------------------------------------
Comments
Post a Comment