இன்றைய முக்கிய செய்திகள் 20 மே 2020
இன்றைய செய்தி துளிகள்
----------------------------------------------------------
இனி வீடுகளிலேயே கொரோனா பரிசோதனை செய்யலாம்: ரேப்பிட் ஆன்டிஜன் முறைக்கு ஐசிஎம்ஆர் அனுமதி.
ரேப்பிட் ஆன்டிஜன் முறையில் (RAT) வீடுகளிலேயே கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ளும் புதிய கிட்டிற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
-------------------------------------------------------
கொரோனா பரிசோதனை செய்வதற்கு கட்டணம் நிர்ணயித்தது தமிழக அரசு:
தனியார் ஆய்வு கூடங்களில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய கட்டணம் நிர்ணயம்.
முதல்வர் மருத்துவ காப்பீடு பயனாளிகளுக்கு 550 ரூபாயாக கட்டணம் நிர்ணயம்.
முதல்வர் மருத்துவ காப்பீடு இல்லாத பயனாளிகளுக்கு 900 ரூபாய் கட்டணம் நிர்ணயம்.
வீட்டிற்கு சென்று கொரோனா பரிசோதனை செய்ய கூடுதலாக 300 ரூபாய் கட்டணம் நிர்ணயம்-மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அரசாணை வெளியீடு.
-------------------------------------------------------
சேலம் உருக்காலை வளாகத்தில் கொரானா சிறப்பு சிகிச்சை மையம்- முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சேலம் உருக்காலை வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் 500 படுக்கைகளுடன் சிகிச்சை மையம் உருவாக்கப்பட்டுள்ளது.
-----------------------------------------------------------
“காற்றோட்ட வசதி கொரோனா பரவலை தடுக்கும்"-கொரோனா 2வது அலை பரவலை தடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு:
புதிய நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசுக்கான முதன்மை அறிவியல் ஆலோசனை அமைப்பு.
"வீடு, அலுவலகங்களில் காற்றோட்ட வசதி நம்மை பாதுகாக்கும்"
"ஜன்னல் கதவுகளை திறந்து வைக்க வேண்டும், எக்ஸாஸ்ட் மின்விசிறியை பயன்படுத்த வேண்டும்"
"வெளிகாற்று வரும் வகையில் வீடு, அலுவலக அறைகளை வைத்திருக்க வேண்டும்"
Comments
Post a Comment