பழைய பென்சன் திட்டம் அமல்
*ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் விரைவில் அமல் – அரசு சார்பு செயலாளர் தகவல்!!* - சமூக வலைதளங்களில் உலா வரும் வைரல் செய்தி
ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் விரைவில் அமல் - அரசு சார்பு செயலாளர் தகவல்!!
ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் விரைவில் அமல் - அரசு சார்பு செயலாளர் தகவல்!!
ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் விரைவில் அமல் – அரசு சார்பு செயலாளர் தகவல்!!
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டம்:
அரசு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் சார்பில் ஜாக்டோ ஜியோ அமைப்பு மூலமாக நடத்தப்பட்ட போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தை மாற்றி பழைய ஓய்வூதியம் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் கடந்த வாரம் தமிழக முதல்வர் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் வாபஸ் பெறுவதாக அறிவித்தார். இருந்த போதிலும் அரசு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அரசு நடைமுறைப்படுத்திய புதிய ஓய்வூதிய திட்டதை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த கோரி 72 மணி நேரம் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தற்போது தமிழக அரசின் சார்பு செயலாளர் கமலக்கண்ணன் கடிதம் ஒன்றை தமிழ்நாடு தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர் நல கூட்டமைப்பிற்கு அனுப்பியுள்ளார். அதில் அவர் ஜாக்டோ ஜியோ அமைப்பு மூலம் அரசு ஆசிரியர்கள் அறிவித்துள்ள பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு திட்டமிட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
1.4.2003அன்று அல்லது அதன் பின்னர் முறையான அரசு பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டதை நடைமுறைப்படுத்த உள்ள சாத்திய கூறுகளை பரிசீலனை செய்து அரசிடம் அனுமதி வழங்க அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை குறித்து அரசு விரைவில் பரிசீலனை செய்து முடிவு எடுக்கப்பட்டு அதுகுறித்து அரசாணை விரைவில் வெளியிடப்படும் என அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
அ.சா.அலாவுதீன்
மண்டல செய்தியாளர்
நமது தேடல்
( UNCONFIRMED WHATSUP FORWARD MESSAGE )
Comments
Post a Comment