TNPTF கல்விச் செய்திகள் 09.11.2020
. 🔥 𝐓 𝐍 𝐏 𝐓 𝐅 🔥
🛡 விழுதுகள் 🛡
*💫கல்விச்செய்திகள்🗞️*
*⚜️2051 ஐப்பசி 24 ≈ 09.11.2020⚜️*
🔥
🛡️பள்ளிகள் திறப்பது தாமதமானால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தொடர்ந்து சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர்
🔥
🛡️தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று முதல் தொடங்குகிறது
🔥
🛡️பள்ளிக்கு செல்ல மாணவர்கள் ஆர்வமாக உள்ளனர் எனவும், இன்று பாதுகாப்பு நெறிமுறைகளுடன் பெற்றோர்கள் கருத்துக் கேட்பு தமிழகம் முழுவதும் உள்ள உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெறும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
🔥
🛡️தமிழகத்தில் தமிழ்வழியில் தொலைதூரக்கல்வி உள்ள அனைத்து பல்கலைக் கழகங்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு. தமிழ் வழியில் பயின்றதற்கான இட ஒதுக்கீட்டை முறைப்படுத்தும் வரை குரூப் 1 தேர்வு நடைமுறைக்கு தடை கோரிய வழக்கில் உத்தரவு பிறப்பித்துள்ளது.
🔥
🛡️TNTET : காலாவதியாகும் நிலையில் 'டெட்' தேர்வு சான்றிதழ்: பீதியில் பட்டதாரிகள்.
இனிமேல் டெட் தேர்வு எழுதுவோர் மட்டுமே வாழ்நாள் முழுவதும் செல்லத்தக்க சான்றிதழ் சலுகை பெற முடியும் என்பதால் ஏற்கனவே எழுதியவர்கள் கவலை
🔥
🛡️மருத்துவப் படிப்பு விண்ணப்பத்தில் திருத்தம் இருந்தால் மெயில் அனுப்பி திருத்திக் கொள்ளலாம் என அமைச்சர் தகவல்
🔥
🛡️அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் TET நிபந்தனை ஆசிரியர்கள் கோரிக்கைகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு
🔥
🛡️2021, ஜனவரி 1-ம் தேதி முதல் அனைத்து 4 சக்கர வாகனங்களுக்கும் பாஸ்ட் டேக் கட்டாயம்: மத்திய அரசு அறிவிப்பு
🔥
🛡️சைனிக் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை; ஜனவரியில் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
🔥
🛡️அரசு ஊழியர்கள்/ அலுவலர்கள் தாங்கள் பணியாற்றும் துறையின் ஓர் அலுவலகத்தில் இருந்து மற்றொரு அலுவலகத்திற்கு அல்லது அதே துறையில் ஒரு அலகிலிருந்து மற்றொரு அலகிற்கு ஒரு வழி மாறுதலில் செல்லும் பொழுது பணிமூப்பு இழக்கத் தேவையில்லை என்பதற்கான சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பாணை பெறப்பட்டுள்ளது..
Comments
Post a Comment