அப்பாடா... கரையை கடந்தது புயல்
கரையைக் கடந்தது நிவர் புயல்
தமிழகம், புதுச்சேரியின் 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரம் இடியுடன் கூடிய தீவிர கனமழை எச்சரிக்கை:
புதுச்சேரி, கடலூர், தி.மலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் கனமழை பெய்யும் என அறிவிப்பு.
அரியலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், மயிலாடுதுறை, நாகை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சேலம், தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், காரைக்கால், திருச்சி, திருப்பத்தூரில் அடுத்த 3 மணிநேரம் மிதமான மழை பெய்யும்.
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு மீண்டும் அதிகரிப்பு!
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 7,000 கன அடியிலிருந்து மீண்டும் 9000 கன அடியாக அதிகரிப்பு.
மழை விபரம்!
நவ.25ம் தேதி காலை 8.30 மணி முதல் இன்று (நவ.26) அதிகாலை 3.30 மணி வரை பதிவாகியுள்ள மழையின் விவரம்!
புதுச்சேரி - 26.செ.மீ
கடலூர் - 25 செ.மீ
சென்னை - 8 செ.மீ
காரைக்கால் - 9 செ.மீ
நாகப்பட்டினம் - 6 செ.மீ
Comments
Post a Comment