கல்வி ஆண்டு நீட்டிப்பு ?
*தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகும் நிலையில், கல்வி ஆண்டுக்கான காலத்தை நீட்டிக்க திட்டம்*
*♦️♦️கொரோனா பிரச்னையால், பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகும் நிலையில், கல்வி ஆண்டுக்கான காலத்தை, ஜூலை வரை நீட்டிக்க, பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது."*
*♦️♦️மார்ச்சில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதன் காரணமாக, பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டன. தற்போது, நோய் பரவல் பல மடங்கு குறைந்து விட்ட நிலையில், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.*
*♦️♦️ஆனால், பள்ளி, கல்லுாரிகளை திறப்பது மட்டும் தள்ளி போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மாணவர்களுக்கு, 'ஆன்லைன்' வழி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. வழக்கமான கல்வி ஆண்டில் பின்பற்றப்படும் அட்டவணைப்படி, பாடங்களை நடத்த முடியவில்லை."*
*♦️♦️கல்வி ஆண்டு கணக்கில், ஜூன் முதல் ஏப்ரல் வரையிலான காலத்தில், திட்டமிட்டபடி பாடங்களையும், தேர்வுகளையும் முடிக்க முடியாத சூழல் உள்ளது.*
*♦️♦️எனவே, கல்வி ஆண்டை கூடுதலாக, மூன்று மாதங்கள் நீட்டிக்க, பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது.*
*♦️♦️அதாவது, ஏப்ரலில் தேர்வு நடத்தி முடிப்பதற்கு பதில், ஜூலை வரை கல்வி ஆண்டை நீடிக்கலாம் என, ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.*
*♦️♦️அதேநேரம், உயர் கல்வி மாணவர் சேர்க்கையையும் கருத்தில் வைத்து, மத்திய கல்வி அமைச்சகத்திடம் விளக்கம் பெற்ற பின், கல்வி ஆண்டு நீட்டிப்பு குறித்த முடிவு வெளியிடப்படும் என, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன."*
Comments
Post a Comment