அண்மை செய்திகள் 16.11.2020
FLASH NEWS TODAY
நீர்த்தேக்கங்களின் நாளும் நீரளவு விவரங்கள்
செம்பரம்பாக்கம் ஏரி தனது கொள்ளளவில் 76% எட்டியுள்ளது
--------------------------------------------------------------------------------
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகே 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற வாய்ப்பு.
பொதுத்தேர்வு அட்டவணையை தமிழக அரசிடம் சமர்ப்பித்தது தேர்வுத்துறை.
10 முதல் 12ம் வரை படிக்கும் மாணவர்களுக்கு ஜூன் மாதம் பொதுத் தேர்வு நடைபெறும் என தகவல்.
----------------------------------------------------------------------------------
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு:
மொத்தமாக 6,10,44,358 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண்கள் 3,01,12,370 பேரும், பெண்கள் 3,09,25,603 பேரும், 3-ம் பாலினத்தவர்கள் 6,385 பேரும் உள்ளனர்.
சென்னையில் மட்டும் 39.40 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
--------------------------------------------------------------------------------
மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வரும் 18-ம் தேதி முதல் தொடங்குகிறது.
சென்னை நேரு விளையாட்டு அரங்கில் பாதுகாப்பான இடைவெளியுடன் கலந்தாய்வு நடைபெறும்: அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.
--------------------------------------------------------------------------------
எம்பிபிஎஸ் ரேங்க் பட்டியல் - திருப்பூர் ஸ்ரீஜன் முதலிடம்:
710 மதிப்பெண்களுடன் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீஜன் முதலிடம்.
----------------------------------------------------------------------------
705 மதிப்பெண்களுடன் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மோகனபிரபா 2ம் இடம்.
சென்னை அயனம்பாக்கத்தை சேர்ந்த ஸ்வேதா 701 மதிப்பெண்களுடன் 3ம் இடம்.
Comments
Post a Comment