TNPTF கல்விச் செய்திகள் 18.10.2020
. 🔥 𝐓 𝐍 𝐏 𝐓 𝐅 🔥
🛡 விழுதுகள் 🛡
*💫கல்விச்செய்திகள்🗞️*
*⚜️2051 ஐப்பசி 02 ≈ 18.10.2020⚜️*
🔥
🛡️பல்வேறு குளறுபடி இருந்ததால் மீண்டும் வெளியிடப்பட்டது நீட் தேர்வு முடிவுகள்
🔥
🛡️50 ஆண்டு காலமாக ஆசிரியர்கள் பெற்றுவந்த உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் ரத்து செய்ததை கண்டித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி போராட்ட அறிவிப்பு.
🔥
🛡️நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 738 பேர் தேர்ச்சி. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களில் தேர்வெழுதியவர்க்ள் 6,692.
🔥
🛡️கிடப்பில் போடப்பட்ட ஓய்வூதியம் தொடர்பான வல்லுநர் குழு அறிக்கை தமிழகத்தில் 5.5 லட்சம் அரசு ஊழியர்கள் அதிருப்தி - நாளிதழ் செய்தி
🔥
🛡️ஆசிரியர் பணி நியமன வயதை குறைத்ததால் பயிற்சி முடித்த 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அரசாணையை திரும்பப்பெற வேண்டும் , என தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் மயில் வலியுறுத்தி உள்ளார் - நாளிதழ் செய்தி
🔥
🛡️நீட் தேர்வில் தான் பயன்படுத்திய ஓஎம்ஆர் சீட் மாற்றப்பட்டுள்ளதாக அரியலூர் மாணவி குற்றம் சாடியுள்ளார். தேர்வில் 680 மதிப்பெண் வரும் என எதிர்பார்த்த நிலையில் 37 மதிப்பெண் மட்டுமே கிடைத்ததால் மாணவி அதிர்ச்சி அடைந்துள்ளார்
🔥
🛡️Neet 2020 மாணவர்கள் தேர்வு எழுதி பெற்ற மதிப்பெண் விவரத்தினை உடன் அனுப்ப வேலூர் CEO உத்தரவு.
🔥
🛡️மத்தியப் பல்கலைக்கழகங்களில், புதிய மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வின் முடிவுகள் சனிக்கிழமை வெளியிடப்பட்டது.
🔥
🛡️2020 ஜூலை மாதம் நடைபெற வேண்டிய ஆன்லைன் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் அக்.25-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இக்னோ அறிவித்துள்ளது.
🔥
🛡️9,000 தனியார் பள்ளி மாணவர்கள் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் சேர்ந்தனர் - நாளிதழ் செய்தி
🔥
🛡தமிழகத்தின் வட மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம் தகவல்.
Comments
Post a Comment