LATEST TAMIL NEWS 08.10.2020
அண்மை செய்திகள் - இன்று
இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு:
2020ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த பெண் கவிஞர் லூயிஸ் க்ளூக்கிற்கு வழங்கப்படும் என நோபல் பரிசு குழு அறிவிப்பு.
------------------------------------------------------------------------------
*📕📰 கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ட்விட்டரில் பிரச்சார இயக்கத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.*
*#Unite2fightcorona என்ற ட்விட்டர் பிரச்சார இயக்கத்தை தொடங்கி வைத்தார்.*
*நாட்டில் கொரோனாவுக்கு எதிரான போர் மக்களால் தொடங்கப்பட்டது என கூறினார்.*
*நமது ஒருங்கிணைந்த முயற்சி பல உயிர்களை காப்பாற்ற உதவியது என தெரிவித்தார்.*
-----------------------------------------------------------------------
*📕📰 தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.*
--------------------------------------------------------------------
----------------------------------------------------------------சென்னையில் விலை மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14 க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.75.95 க்கும் விற்பனை.
--------------------------------------------------------------------
அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் நேருக்கு நேர் விவாதம்.
மைக் பென்ஸ் மற்றும் கமலா ஹாரிஸ் நேருக்கு நேர் விவாதம் செய்கின்றனர்.
சால்ட் லேக்கில் உள்ள உட்டா பல்கலைக் கழகத்தில் விவாதம் நடைபெற்றுவருகின்றது.
-----------------------------------------------------------------------
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் - ரூ.300க்கான சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் நாளை வெளியீடு- tirupathibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.
-----------------------------------------------------------------------
பொறியியல் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு ஆன்லைன் கலந்தாய்வுக்கு, 4 சுற்றுகள் கொண்ட அட்டவணையை வெளியிட்டது தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம்.
தொழில் பிரிவு மாணவர்களின் பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வு ஒரே சுற்றாக நடைபெறுகிறது.
Comments
Post a Comment