LATEST NEWS UPDATES 19.10.2020
இன்றைய முக்கிய செய்திகள்
*♨️ சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் 42 டாலராக உள்ளது.*
*♨️கோவிட்-19 காரணமாக வளர்ச்சித் திட்டப் பணிகளில் தொய்வு ஏற்படக்கூடாது என்ற அடிப்படையில் தமிழக அரசு செயல்பட்டு வருவதாக உணவு அமைச்சர் திரு காமராஜ் கூறியுள்ளார்.*
*♨️ நீலகிரி மாவட்டத்தில் மதிப்புகூட்டப்பட்ட தேயிலை உற்பத்திக்கு தோட்டக்கலைத் துறை ஊக்கமளித்து வருகிறது.*
*♨️இந்தியா - இலங்கை இடையே கூட்டு கடற்படை பயிற்சி இன்று திரிகோணமலையில் தொடங்குகிறது.*
*♨️ நியூசிலாந்து தேர்தலில் வெற்றிபெற்றுள்ள அந்நாட்டு பிரதமர் திருமதி Jacinda Ardern-க்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.*
* ♨️மகாராஷ்ராவில் காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் ஐந்து நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.*
*♨️கர்நாடகாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவத்தினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.*
*♨️பண்டிகை காலங்களில் பாதுகாப்பான வழிமுறைகளை பின்பற்றி ரயில் பயணம் மேற்கொள்வது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி திருநெல்வேலி ரயில் நிலையத்தில் நேற்று நடைபெற்றது.*
*♨️மத்திய அரசின் மக்கள் தொடர்பு கள அலுவலகம், தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகத்தின் சார்பில் வேலூரில் இன்று கோவிட்-19 விழிப்புணர்வு தொடர்பான பிரச்சார வாகனத்தை மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் சிவராமன் துவக்கி வைத்தார்.*
*♨️ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் 375 நெசவாளர்களுக்கு 18.75 லட்சம் ரூபாய் மதிப்பிலான மானிய தொகையினை மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே சி கருப்பண்ணன் வழங்கினார்.*
*♨️மதுரை கூட்டுறவுத்துறை முலம் அம்மா நகரும் நியாய விலைக் கடைகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லுார் ராஜீ மற்றும் வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் உதயகுமார் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.*
*♨️தருமபுரி மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பில் கோவிட்-19 விழிப்புணர்வு ஆட்டோ பிரச்சாரத்தை இலக்கியம்பட்டியில் மாவட்ட நல கல்வி அலுவலர் ரங்கராஜன் தொடங்கி வைத்தார்.*
*♨️பாரத பிரதமரும் தமிழக முதல்வரும் தொடர்ந்து வலியுறுத்தி வருவது போல அனைவரும் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும், தேவையற்ற பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை தவிர்க்க வேண்டும் என்றும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் தென்னரசு தெரிவித்துள்ளார்.*
பள்ளிகள் திறப்பு - தற்போது இல்லை:
"பள்ளிகள் திறப்பதற்கு தற்போது சாத்தியக்கூறுகள் இல்லை"-பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.
“அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகே முடிவு செய்யப்படும்"
“பள்ளிகள் திறப்பது தொடர்பாக முதலமைச்சர் தான் அறிவிப்பார்"
இன்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை நடத்திய நிலையில் புதிய தகவல்.
----------------------------------------------------------------------
அடுத்த 48 மணி நேரத்தில் கன மழை:
அடுத்த 48 மணி நேரத்தில் விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டையில் கன மழை.
சேலம், தர்மபுரி மாவட்டங்களில் கன மழை.
ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், கரூர், நாமக்கல், பெரம்பலூர், திருச்சியில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை.
கடலூர், அரியலூர் மற்றும் புதுவை பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது - மிதமான மழை.
-------------------------------------------------------------------------
p>சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.37,520க்கு விற்பனை.--------------------------------------------------------------------------
நிறுத்தி வைக்கப்பட்ட அண்ணா பல்கலைகழக மாணவர்கள் தேர்வெழுதிய வீடியோக்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
வீடியோவை ஆய்வு செய்யும் குழுவின் முடிவு அடிப்படையில் மாணவர்களின் தேர்வு முடிவு வெளியடப்படும்- அண்ணா பல்கலைக்கழகம்.
அன்ணா பல்கலைக்கழக தேர்வை செப்.24 முதல் செப்.29 வரை ஆன்லைனில் நடத்திய தேர்வை 1.50 லட்சம் மாணவர்கள் எழுதினர்.
முறைகேடாக தேர்வு எழுதியது தொழில்நுட்ப அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்டதால் 3,000 மாணவர்களுக்கு முடிவுகள் அறிவிப்பு நிறுத்தம்.
-------------------------------------------------------------------------
Comments
Post a Comment