LATEST NEWS UPDATES 18.10.2020
இன்றைய அண்மைச் செய்திகள்
திருப்பதி ஏழுமலையான் கோவில் நவராத்திரி பிரம்மோற்சவம்.
சரஸ்வதி அலங்காரத்தில் அன்ன வாகனத்தில் மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
--------------------------------------------------------------------
புரட்டாசி மாதம் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் இறைச்சிக் கடைகளில் கூட்டம்.
ஆட்டுக்கறி, கோழிக்கறி மற்றும் மீன்கள் வாங்குவதற்காக அலைமோதும் அசைவப் பிரியர்கள்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டை மற்றும் காசிமேடு மீன் மார்க்கெட்டில் அதிகாலை முதல் குவிந்த மக்கள்.
--------------------------------------------------------------------
இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகளை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்.
பொறியியல் மாணவர்களுக்கு முதன்முறையாக ஆன்லைனில் நடைபெற்ற, இறுதி செமஸ்டர் தேர்வின் முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
ஆன்லைனில் மாணவர்களின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
www.annauniv.edu என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறியலாம்.
--------------------------------------------------------------------
சென்னையில் 17 வது நாளாக விலை மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14 க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.75.95 க்கும் விற்பனை.
--------------------------------------------------------------------
Comments
Post a Comment