NATIONAL CHILDREN'S AWARD 2020
*தேசிய குழந்தைகள் விருதுபெற, விண்ணப்பங்கள் வரவேற்பு!*
பிரதமரின், தேசிய குழந்தைகள் விருது பெற, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
புதிய கண்டுபிடிப்பு, கல்வி, விளையாட்டு, கலை மற்றும் பண்பாடு, சமூக சேவை போன்ற துறைகளில், வீர தீர செயல்புரிந்த, தனித்தகுதி படைத்த குழந்தைகளை, அங்கீகரிக்கும் விதமாக, 'பாலசக்தி புரஷ்கார்' என்ற, குழந்தைகளுக்கான தேசிய விருதுவழங்கப்படுகிறது.இவ்விருது, 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை, பதக்கம், சான்றிதழ், தகுதியுரை புத்தகம் ஆகியவற்றை கொண்டதாகும்.
குழந்தைகள் மேம்பாடு, குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தைகள் நலம் போன்ற துறைகளில், குழந்தைகளுக்கான சேவைகளில் தலைசிறந்த பங்களிப்பு செய்த, தனிப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களை, அங்கீகரிக்கும் விதமாக, 'பால கல்யாண் புரஷ்கார்' என்ற, தேசிய விருது வழங்கப்படுகிறது. தனிப்பட்ட நபர்களுக்கான விருதுக்கு, 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை, பதக்கம், சான்றிதழ் மற்றும் தகுதியுரை வழங்கப்படும்.
நிறுவனங்களுக்கான விருதுக்கு, 5 லட்சம் ரூபாய்க்கான காசோலை, பதக்கம், சான்றிதழ் மற்றும் தகுதியுரை வழங்கப்படும். இவ்விருதுகளுக்கான விதிமுறைகள், மத்திய அரசின், மகளிர் மற்றும் சிறார் மேம்பாட்டு அமைச்சகத்தின், www.nca-wcd.nic.in என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.குழந்தைகள், தனிப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து, இவ்விருதுக்கு, இணையதளம் வழியாக மட்டும் விண்ணப்பிக்கப்பட வேண்டும். அதற்கு, வரும் 15ம் தேதி கடைசி நாள்.இறுதி நாளுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது. குடியரசு தினத்திற்கு முந்தைய வாரத்தில், ஜனாதிபதியால் தேசிய விருது வழங்கப்படும்.
Comments
Post a Comment