எஸ்.பி.ஐ.,ல் புதிய நடைமுறை; ஏ.டி.எம்.,ல் பணம் எடுக்கும் விதிகளில் மாற்றம் எஸ்.பி.ஐ., அறிவித்துள்ளதாவது:எஸ்.பி.ஐ., வாடிக்கையாளர்கள் இனி, ஓ.டி.பி., சரிபார்ப்பிற்குப் பிறகே, 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஏ.டி.எம்.,ல் இருந்து எடுக்க முடியும். வாடிக்கையாளர் வங்கியில் பதிவுசெய்த மொபைல்போன் எண்ணுக்கு அந்த ஓ.டி.பி., எண் அனுப்பப்படும். இது ஒரு கூடுதல் பாதுகாப்பாகக் கருதப்படுகிறது. இந்த புதிய நடைமுறையால், அட்டைதாரர்களைத் தவிர வேறு யாரும் பணத்தை ஏ.டி.எம்.,ல் இருந்து எடுக்காமல் தடுக்க முடியும். இந்த நடைமுறையை, கடந்த ஜனவரி மாதத்தில், இரவு 8:00 முதல் காலை 8:00 மணி வரை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தினோம். அது நல்ல பலனை அளித்தது. தடுக்கப்பட்டது. இதனால் இந்த நடைமுறை வரும் 18ம் தேதி முதல் முழுமையாக நடைமுறைக்கு வருகிறது. மற்ற வங்கியின் ஏ.டி.எம்.,ல் எஸ்.பி.ஐ., அட்டை வைத்திருக்கும் வாடிக்கையாளர் பணத்தை எடுக்கும்போது இந்த வசதி பொருந்தாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது