*SBI-யின் புதிய ஏடிம் விதிகள் அமல்! விவரங்கள் இதோ* இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான எஸ்பிஐ, 01 ஜூலை 2020 முதல் சில புதிய ஏடிஎம் விதிகளை அமல்படுத்தி இருக்கிறது. அந்த விதிகள் என்ன..? எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் எதை எல்லாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் போன்றவைகளை எல்லாம் கீழே ஒவ்வொன்றாக விரிவாகப் பார்ப்போம். கடந்த 30 ஜூன் 2020 வரை, எஸ்பிஐ வாடிக்கையாளர்கள், எந்த வங்கி ஏடிஎம்-ல் இருந்தும் எவ்வளவு வேண்டுமானாலும் பணக் எடுக்கலாம் என்று விதியை தளர்த்தி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. சரி புதிய விதிகளைப் பார்ப்போம். எத்தனை முறை எடுக்கலாம் எஸ்பிஐ சேமிப்புக் கணக்கு வாடிக்கையாளர்களின் சராசரி மாதாந்திர பேலன்ஸ் (Average Monthly Blance) தொகை, 25,000 ரூபாய் வரை இருந்தால் எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் மாதம் 5 முறையும், எஸ்பிஐ அல்லாத வங்கி ஏடிஎம்களில் 3 முறையும் பயன்படுத்திக் கொள்ளலாம். இது சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற பெரு நகரங்களுக்கு மட்டுமே பொருந்தும். மற்ற நகர வாசிகளுக்கு எஸ்பிஐயில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் சராசரி மாதாந்திர ப...