TNPTF கல்விச் செய்திகள் 13.06.20
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2051 வைகாசி 31 ♝ &*
13.6.2020
🔥
🛡தமிழகத்தில் கல்லூரி தேர்வுகளை ரத்து செய்வது குறித்து மாண்புமிகு முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்களுடன் ஆலோசித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் திரு. கே.பி.அன்பழகன் அவர்கள் அறிவிப்பு
🔥
🛡கொரோனா பரவல் காரணமாக நிலுவையில் உள்ள அனைத்து இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளையும் (UG & PG) ரத்து செய்தது ஒடிசா அரசு!
UGC பரிந்துரைத்த மதிப்பீட்டு முறையின்படி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிப்பு.
🔥
🛡தொடக்கக்கல்வி இயக்குநர் திரு முத்து பழனிச்சாமி அவர்களுக்கு கூடுதல் முழு பொறுப்பாக தேர்வுத்துறை இயக்குனர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தேர்வு துறை இயக்குநர் மருத்துவ விடுப்பில் உள்ளதால் கூடுதலாக தொடக்கக் கல்வி இயக்குநருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
🔥
🛡இணையவழி வகுப்புகளுக்கு தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணம் செலுத்தக்கூறி பெற்றோரை நிர்பந்திக்கக்கூடாது.
அரசாணை விதிகளை மீறி கல்விக்கட்டணம் செலுத்த வற்புறுத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை - தனியார் பள்ளிகள் இயக்குநர்
🔥
🛡10ஆம் வகுப்பு தேர்ச்சிக்கு 37 மதிப்பெண்கள் தேவை - கணக்கீடு செய்வது எப்படி? பள்ளிக்கல்வி துறை அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
🔥
🛡தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் இடமாற்றம். அவருக்கு பதில் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் தமிழக சுகாதாரத் துறைச் செயலாளராக நியமனம்
🔥
🛡ஜேஇஇ, நீட் மாணவர்களுக்கு தேசிய டெஸ்ட் அபியாஸ் செயலி அறிமுகப்படுத்தியுள்ளது. 65 லட்சம் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து பயிற்சி
🔥
🛡தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு, பத்தாம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடுவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில், சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் பிளஸ் 1 சோ்க்கையைத் தொடங்குவதில் தனியாா் பள்ளிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
🔥
🛡10ம் வகுப்பு தேர்வு ரத்தானதால் பல கோடி ரூபாய் வீண். தேர்வு நடத்த வேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள், கல்வியாளர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர். ஆனால் அதை பொருட்படுத்தாமல், வீம்புக்கு நடத்துவதாக அறிவித்ததால், மாணவர்களுக்கு தேவையில்லாத மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதோடு, கொரோனா காலத்தில் அரசுக்கு தேவையில்லாமல் பல கோடி ரூபாய் செலவும் ஏற்பட்டுள்ளது. - நாளிதழ் செய்தி
🔥
🛡பள்ளிக்கல்வி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து முதுகலை கணித ஆசிரியர்களுக்கு பல்வேறு துறைகளில் கணிதத்தின் பயன்பாடு குறித்து (Application Of Mathematics In Different Domains) பயிற்சி தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியிட்டுள்ளார்.
🔥
🛡 தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40698-ஐ தொட்டது. இந்திய அளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதுவரை 367 நபர்கள் இறந்துள்ளனர். - நாளிதழ் செய்தி

Comments
Post a Comment