TNPTF கல்விச் செய்திகள் 21.05.2020
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2051 வைகாசி 08 ♝ &*
21.05.2020
🔥
🛡பள்ளிக் கல்வி - கோவிட்-19 காரணமாக வெளி மாநிலம் /வெளி மாவட்டத்தில் தங்கி இருக்கும் பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் விபரம் கோரி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
🔥
🛡மாணவர்களுக்கு மீண்டும் வகுப்புகளை நடத்திய பிறகே பத்தாம் வகுப்பு தேர்வை நடத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
🔥
🛡அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 15% வரை இட ஒதுக்கீடு அளிக்க பரிந்துரை செய்ய நீதிபதி கலையரசன் குழு முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுள்ளது. மேலும் விசாரணை முடிந்ததால் இந்த மாத இறுதிக்குள் அரசிடம் அறிக்கையை சமர்ப்பிக்கப்படும் என தகவல்
🔥
🛡1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்ற அறிவிப்பை மீறி, பள்ளிகள் திறக்கப்பட்ட உடன் தேர்வு நடத்தி தேர்ச்சி வழங்கும் செயல்களில் சில தனியார் பள்ளிகள் ஈடுபட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என
தனியார் பள்ளிகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
🔥
🛡ஜூலையில், பள்ளிகளில் வகுப்பு துவங்க அனுமதிக்க வேண்டும்' என, தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் ஜூன், 15 முதல், 30க்குள், புத்தகம், நோட்டு வழங்குவது, கல்வி கட்டணம் வசூலிப்பது போன்ற பணிகளுக்கு அனுமதிக்க வேண்டும். கொரோனா நோய் தடுப்பு விதிகளை பின்பற்ற, பள்ளிகள் தயார் நிலையில் உள்ளன எனவும் மனுவில் தெரிவித்துள்ளது.
🔥
🛡ஒருங்கிணைந்த நான்காண்டு ஆசிரியர் கல்வியியல் படிப்புக்கான நுழைவு தேர்வுக்கு, வரும், 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க, தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி.,
அவகாசம் வழங்கி உள்ளது.
🔥
🛡அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டிய அவசியம் இல்லை. 10-ம் வகுப்பு தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளதால் முன்னர் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை இரத்து செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு.
🔥
🛡கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும்
பள்ளிகள் மூடப்பட்டு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் 10 & 12 ஆம் வகுப்புத் தேர்வுகளை நடத்திக் கொள்ள அனுமதி அளித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தேர்வு மையங்களை அமைக்கக் கூடாது என்றும், ஆசிரியர்கள், மாணவர்கள் முகக்கவசங்கள் அணிந்து, பரிசோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் அறிவிப்பு.
🔥
🛡ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு ,அங்குள்ள ஆசிரியர்களை நிலை குலையச் செய்துள்ளது.
தனியார் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இரண்டு மாதங்களாகச் சம்பளம் கொடுக்கப்படாததால் கூலி வேலைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். - நாளிதழ் செய்தி
🔥
🛡மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், புதிய தேதி ஜூன் 5 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது
🔥
🛡கொரோனா பாதிப்பிலும் பள்ளிகளுக்கான கல்வி கட்டணத்தை 50 சதவீதம் உயர்த்த தனியார் பள்ளிகள் கோரிக்கை
🔥
🛡 தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13191-ஐ தொட்டது. இந்திய அளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதுவரை 87 நபர்கள் இறந்துள்ளனர். - நாளிதழ் செய்தி
Comments
Post a Comment