TNPTF கல்விச் செய்திகள் 12.05.2020
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2051 சித்திரை 29 ♝ &*
12.05.2020
🔥
🛡தனிமனித இடைவெளியுடன் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அறிவிப்பு
🔥
🛡பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம், அடுத்த வாரம் துவங்க உள்ளது. இதற்கான மையங்கள் அமைக்கும் பணியும் நடந்து வருவதாக கல்வித்துறை அறிவித்துள்ளது.
🔥
🛡EMIS இணையதளத்தில் ஏற்படுத்தியுள்ள புதிய வசதி..
emis.tnschools.gov.in க்கு சென்றால்
1.e-learn for students
2.TNTP for teachers
3. Public portal (CSR contribution)
4. School Education official ஆகிய நான்கு இணையதளங்களுக்கும் செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது.
🔥
🛡NCERT சார்பில் நடத்தப்படும் ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வியியல் நான்காண்டு படிப்பிற்கான நுழைவு தேர்வுக்கு, வரும், 30ம் தேதி வரை விண்ணப்பிக்க, அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.
🔥
🛡பள்ளிகள் திறக்கப்படும் நாளில், மாணாக்கர்களுக்கு விலையில்லா புத்தகங்கள், பை, ஷூ உள்ளிட்டவை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என பள்ளி கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
🔥
🛡கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, உலகில், பள்ளிக் கல்வி மற்றும் ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளதாக, உலக வங்கியின் கல்விக்குழு எச்சரித்துள்ளது
🔥
🛡மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறைப்பதற்கு எந்த ஒரு திட்டமும் பரிசீலனையில் இல்லை, வதந்திகளை நம்ப வேண்டாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக, ஊழியர்களின் சம்பளம் 30% குறைக்கப்பட உள்ளதாக வெளியான தகவலுக்கு மத்திய அரசு விளக்கம்
🔥
🛡கரோனா ஊரடங்கால் அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டுள்ளன. இருப்பினும், குழந்தைகளின் படிக்கும் திறன் தடைப்படாமல் இருக்க வாட்ஸ் அப் வீடியோக்கள் மூலம் பாடம் கற்கும் புதிய முறையை அங்கன்வாடி பணியாளர்கள் கடந்த மாதம் தொடங்கினர்.இது பெற்றோர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது
🔥
🛡 தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8002-ஐ தொட்டது. இந்திய அளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் மூன்றாம் இடத்தில் உள்ளது. இதுவரை 53 நபர்கள் இறந்துள்ளனர். - நாளிதழ் செய்தி.
Comments
Post a Comment