TNPTF கல்விச் செய்திகள் 11.05.2020
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2051 சித்திரை 28 ♝ &*
11.05.2020
🔥
🛡10-ம் வகுப்பில் அனைவருக்கும் தேர்ச்சி அளிக்க முடிவு செய்தபோது மத்திய அரசு ஒப்புதல் தரவில்லை எனவும், பத்தாம் வகுப்பு மாணவர்களின் மனநிலையையும் அரசு பரிசீலனை செய்துள்ளது. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
🔥
🛡பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம், அடுத்த வாரம் துவங்க உள்ளது. இதற்கான மையங்கள் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள் அனைவருக்கும், முகக் கவசம் வழங்கப்படுவதுடன், அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே, மையங்கள் ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
🔥
🛡பள்ளிக் கல்வி - கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு . ஒழுங்குமுறைகள் அனைத்துவகைப் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி. பெற்றதாக அறிவித்தல் சார்ந்து திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செயல்முறைகள் வெளியிட்டுள்ளார்.
🔥
🛡தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் ச.மயில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர், ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மு.அன்பரசு ஆகியோரின் பேட்டி-விகடன் இதழில். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயது 59 ஆக உயர்த்தப்பட்டது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ளது.
🔥
🛡நடப்பு ஆண்டுக்கான டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்.
அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது நீட்டிக்கப்பட்டுள்ளதால், நடப்பு ஆண்டில் தேர்வுகள் ரத்து என்பது தவறான தகவல் என அறிவித்துள்ளது
🔥
🛡இன்று முதல் ஊரடங்கு காலத்தில் மேலும் பல தளர்வுகள் அளித்து தமிழக அரசு அனுமதி. இன்று ( மே 11) முதல் என்னென்ன கடைகள் இயங்கலாம்? தமிழக அரசு பட்டியல் வெளியிட்டுள்ளது.
🔥
🛡வனப்பாதுகாவலர் தேர்வுக்கு பிந்தைய நடைமுறைகள், மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்படுவதாக, வனத்துறை அறிவித்துள்ளது.
🔥
🛡 தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7204-ஐ தொட்டது. இந்திய அளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் மூன்றாம் இடத்தில் உள்ளது. இதுவரை 47 நபர்கள் இறந்துள்ளனர். - நாளிதழ் செய்தி.
Comments
Post a Comment