TNPTF கல்விச் செய்திகள் - 08.05.2020
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2051 சித்திரை 25 ♝ &*
08.05.2020
🔥
🛡அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயது உயர்வு இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் செயல் - TNPTF கண்டனம்
🔥
🛡அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வு வயது நீட்டிப்பதால் இளைஞர்களின் வேலைவாய்ப்பை கடுமையாக பாதிக்கும் எனவும், மறுபரிசீலனை செய்ய வேண்டுமெனவும்
தமிழக அரசிற்கு ஜேக்டோ-ஜியோ தெரிவித்துள்ளது.
🔥
🛡ஓய்வு வயதை அதிகரித்ததற்கு அரசு ஊழியர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அரசை கண்டித்து இன்று போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது
🔥
🛡தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயதை 58-லிருந்து 59-ஆக உயர்த்தி அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
🔥
🛡பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு, ஒவ்வொரு பாடத்துக்கும் இடைவெளி உள்ளவாறு, அட்டவணை அமைக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கூறியுள்ளார்.
🔥
🛡தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பாக மே மாதம் கருணை தொகையாக ஊதியம் வழங்க வேண்டுமென மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு பணிவான கோரிக்கை விடுத்துள்ளது.
🔥
🛡ஊழியா்கள் பணிக்கு வராவிட்டால் ஊதியம் பிடித்தம் அல்லது விடுப்புகளைக் கழிப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பிற்படுத்தப்பட்டோா் நல இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.
🔥
🛡சிபிஎஸ்இ பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மேலும் கற்பித்தல் திறன் பெறுவதற்காக ஆன்லைன் மூலம் ஆசிரியர் பயிற்சி அளிக்க சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. இதில் நாடு முழுவதும் 35 ஆயிரம் ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள் பங்கேற்க உள்ளனர்
🔥
🛡அதிமுக அரசின் அலட்சியப் போக்கால் தமிழகத்தில் மட்டும் சுமார் 34,000 மாணவர்கள் கொரோனா பரவல் எதிரொலியால் பன்னிரெண்டாம் வகுப்புக்கான தேர்வுகளை எழுதவில்லை .
இச்சூழ்நிலையில் தேர்வெழுதியவர்கள் எத்தகைய பதற்றத்தில் தேர்வு எழுதி இருப்பார்கள்?"
-திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி
🔥
🛡 தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5409-ஐ தொட்டது. இந்திய அளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் நான்காம் இடத்தில் உள்ளது. இதுவரை 37 நபர்கள் இறந்துள்ளனர். - நாளிதழ் செய்தி.
Comments
Post a Comment