TNPTF கல்விச் செய்திகள் 07.05.2020
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2051 சித்திரை 24 ♝ &*
07.05.2020
🔥
🛡 11ஆம் வகுப்பிற்கான எஞ்சிய ஒரு தேர்வு ரத்து செய்யப்பட மாட்டாது, தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு
🔥
🛡நீட் தேர்விற்கான பயிற்சி வகுப்பு ஆன் லைன் மூலம் இவ்வாரத்தில் தொடங்கும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அறிவிப்பு
🔥
🛡TNPTF - மாநில துணைத்தலைவர் திரு.தோ.ஜாண்கிறிஸ்துராஜ் அவர்கள் தலைமையில் ஏழு பேர் கொண்ட 'இயக்க அமைப்பு விதி திருத்தக் குழு" அமைக்கப்பட்டுள்ளது. மாநில செயற்குழு தீர்மானத்தின்படி மேற்படி குழுவிற்கு இயக்கத்தின் கிளை அமைப்புக்கள் மற்றும் இயக்க உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை 31.05.2020க்குள் கீழ்க்கண்ட குழுத்தலைவரின் முகவரிக்கு அஞ்சல் அல்லது மின்னஞ்சல் வழியே அனுப்ப வேண்டி பொதுச்செயலாளர் அறிக்கை
🔥
🛡தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்களின் ஒருநாள் ஊதியம் ரூ.34.83 கோடி முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ளது.
🔥
🛡சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கிடைக்கவேண்டிய சீர்மிகு அந்தஸ்து பெறுவதற்கு மே 31-ஆம் தேதிக்குள் தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளிக்காவிட்டால் வேறு பல்கலைக்கழகத்திற்கு மாற்றித் தரப்படும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகின
🔥
🛡சிபிஎஸ்இ பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மேலும் கற்பித்தல் திறன் பெறுவதற்காக ஆன்லைன் மூலம் ஆசிரியர் பயிற்சி அளிக்க சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. இதில் நாடு முழுவதும் 35 ஆயிரம் ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள் பங்கேற்க உள்ளனர்
🔥
🛡மதுபானக் கடைகளில் ஏற்படும் கூட்ட நெரிசலைச் சரிசெய்ய ஆந்திர அரசு ஆசிரியர்களை அமர்த்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
🔥
🛡ஆசிரியர்களுக்கான மாற்றுப்பணி விபரம் - கோவை வருவாய் கோட்டாட்சியர் செயல்முறைகள் வெளியிட்டுள்ளார்.
🔥
🛡மாற்றுத் திறன் அரசு ஊழியர்களுக்கு 17.05.2020 வரை பணிவிலக்கு நீட்டிப்பு - அரசு உத்தரவு
🔥
🛡 தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4829-ஐ தொட்டது. இந்திய அளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் நான்காம் இடத்தில் உள்ளது. இதுவரை 33 நபர்கள் இறந்துள்ளனர். - நாளிதழ் செய்தி.
Comments
Post a Comment