NEW PUBLIC EXAM PATTERN 2020-21
பள்ளி தேர்வு முறையில் புதிய மாற்றங்கள் என்னென்ன?
*11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் இனி 6 பாடங்களுக்குப் பதிலாக 5 பாடங்களைப் படித்து 500 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதும் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது*
தமிழகத்தில் 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முறையில் மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ் மற்றும் ஆங்கிலத்துடன் மொத்தம் 6 பாடங்களைப் படித்துவந்த மாணவர்கள் இனி 5 பாடங்களைப் படித்தாலே போதும். தேர்வும் 500 மதிப்பெண்களுக்கே நடைபெறும். அதேநேரம், தற்போது நடைமுறையில் உள்ள 6 பாடங்களைக் கொண்ட 600 மதிப்பெண்கள் தேர்வு முறையும் அமலில் இருக்கும்.
புதிய முறைப்படி அறிவியலில் 4 பிரிவுகள் இருக்கும். அதில் உயர்கல்வியில் பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்களுக்கும், மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களுக்கும் தனித்தனி பிரிவு உண்டு. *பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் உயிரியல் படிக்காமல் தமிழ், ஆங்கிலத்தோடு கணிதம், வேதியியல், இயற்பியலை மட்டும் படிக்கலாம்*.
*மருத்துவம் பயில விரும்பும் மாணவர்கள் கணிதம் பயிலத் தேவையில்லை. அதற்குப் பதிலாக தமிழ், ஆங்கிலத்தோடு வேதியியல், இயற்பியல், உயிரியல் என ஐந்து பாடங்களைப் படிக்க வேண்டும்*. இதற்கு மாறாக *தற்போது உள்ள முறைப்படி 6 பாடங்களையும் எடுத்து படிக்கும் மாணவர்கள் உயர்கல்வியில் மருத்துவம், பொறியியல் என இரண்டு படிப்புகளில் விரும்பியதை தேர்வு செய்யும் வாய்ப்பைப் பெறலாம்*
*கலைப்பிரிவில் வரலாறு தவிர்த்துவிட்டு தமிழ், ஆங்கிலத்தோடு, பொருளியல், வணிகவியல், கணக்குப் பதிவியல் படிக்கும் பாடப்பிரிவு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது*. *500 மதிப்பெண்களைக் கொண்ட இந்த புதிய நடைமுறை, வரும் 2020-21-ம் கல்வியாண்டில் 11-ம் வகுப்பில் அறிமுகம் செய்யப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது*...

Comments
Post a Comment