ஜாக்டோ ஜியோ உண்ணாவிரதம் - தள்ளிவைப்பு
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*JACTTO-GEO அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தை - நாளைய உண்ணாவிரதம் ஒத்திவைப்பு*
🔥
🛡 ஜாக்டோ-ஜியோ சார்பாக தீர்க்கப்படாத பல்வேறு கோரிக்கைகள் சார்ந்தும், சனவரியில் நடைபெற்ற போராட்டத்தின் போது தொடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் நாளை (23.09.2019) மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.
🔥
🛡 இந்நிலையில் நேற்று மாலை ஜாக்டோ-ஜியோ பொறுப்பாளர்களை நேரில் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அரசு அழைப்பு விடுத்திருந்தது.
🔥
🛡 இதனைத் தொடர்ந்து இன்று (23.09.2019) சென்னையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் மாண்புமிகு கல்வி அமைச்சர் திரு.செங்கோட்டையன் மற்றும் மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் திரு.உதயகுமார் உள்ளிட்டோரைக் கூட்டாக ஜாக்டோ-ஜியோ பொறுப்பாளர்களை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
🔥
🛡 பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து நடைபெற்ற பொறுப்பாளர் ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் நிதிக்காப்பாளரும், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மேனாள் மாநிலத் தலைவருமான தோழர்.மோசஸ் ஊடகங்களுக்கு பின்வருமாறு பேட்டியளித்தார்.
🔥
🛡 இன்றைய பேச்சு வார்த்தை சுமுகமான முறையில் நடைபெற்றது. ஆசிரியர்கள் & அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்தும், கோரிக்கைகள் குறித்தும் ஒருவார காலத்தில் நல்ல முடிவு எடுப்பதாகவும், இது குறித்து முதல்வரிடம் கலந்து பேசி நல்லமுடிவை விரைவில் அறிவிப்பதாகவும் அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
🔥
🛡 மேலும் அரசு தரப்பு கேட்டுக்கொண்டதன் பேரில், கோரிக்கைகள் சார்ந்து அரசின் நல்ல முடிவை எதிர்நோக்கி நாளை நடைபெறுவதாக இருந்த உண்ணாவிரத போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது.
🔥
🛡 அக்டோபர் 2-வது வாரத்தில் நடத்தப்படவுள்ள ஜாக்டோ ஜியோ மாநிலப் பொறுப்பாளர்களின் விரிவடைந்த உயர்மட்டக்குழு கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படும்.
Source :
*_🅒тиρтfνιZнυ∂нυgαℓ.вℓσgѕρσт.¢σм_*

Comments
Post a Comment