TNAU ADMISSIONS 2019-20
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை ஆன்லைனில் 8ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்: தரவரிசை பட்டியல் ஜூன் 20ல் வெளியீடு*
கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடப்பாண்டுக்கான இளங்கலை படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு வரும் 8ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 14 உறுப்பு மற்றும் 27 இணைப்பு கல்லூரிகள் உள்ளன.
இதில், இளங்கலை அறிவியல் பிரிவில் வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல், உணவு ஊட்டச்சத்து மற்றும் உணவு முறை, வேளாண்மை பொறியியல், பட்டுவளர்ப்பு உள்ளிட்ட 6 படிப்புகள் மற்றும் உயிர்தொழில் நுட்பவியல், வேளாண் வணிக மேலாண்மை, உணவு தொழில் நுட்பவியல், ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் என 4 தொழில்நுட்ப படிப்புகள் என மொத்தம் 10 பட்டப்படிப்புகள் வழங்கப்படுகிறது.
இந்த படிப்புகளுக்கு 2019-20ம் ஆண்டில் அறிவியல் படிப்பில் 3,695 இடங்கள், தொழில்நுட்ப படிப்பில் 210 இடங்கள் என மொத்தம் 3,905 இடங்கள் நிரப்பப்படுகிறது. பிளஸ்2வில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது கணினி அறிவியல் பிரிவில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வேளாண் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த படிப்புகளுக்கு வேளாண் பல்கலைக்கழகத்தின் ttp://www.tnau.ac.in/ugadmission.html என்ற இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அதன்படி, மாணவர்கள் வரும் 8ம் தேதி முதல் ஜூன் 7ம் தேதி வரை இணையதளம் மூலமாக வேளாண் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்தில் பிழை திருத்தம் ஜூன் 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை செய்யலாம். சிறப்பு ஒதுக்கீடுகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடக்கிறது. இதனை தொடர்ந்து மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையிலான தரவரிசை பட்டியல் ஜூன் 20ல் வெளியிடப்படுகிறது.
மாணவர்கள் விண்ணப்பத்தை ஆன்லைனில் பூர்த்தி செய்து, பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவு செய்த பிறகு, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, ஆன்லைன் வங்கி வழியாக செலுத்தலாம். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இணைய வழியில் நடைபெறும். கலந்தாய்வு தேதி தொடர்பான அறிவிப்பு பின்னர் தெரிவிக்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு 0422-6611345, 6611346 என்ற எண்ணில் அலுவலக நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Post a Comment