ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்ட பயிற்சி
புதிய பாடத் திட்டம்: 1.30 லட்சம் ஆசிரியர்களுக்கு ஜூனில் பயிற்சி
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 1.30 லட்சம் ஆசிரியர்களுக்கு புதிய பாடத் திட்டம் குறித்து வரும் ஜூன் மாதம் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. தமிழகத்தில் 2018-2019-ஆம் கல்வியாண்டில் 1, 6, 9, 11 ஆகிய 4 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. சிந்திக்க வைக்கும் கேள்விகள், கியூ.ஆர். குறியீடு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் என பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட இந்தப் பாடத் திட்டத்துக்கு பெற்றோர்- ஆசிரியர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்தது.
இதையடுத்து பாடங்களை மாணவர்களுக்கு எப்படி நடத்த வேண்டும், புதிய பாடத் திட்டத்தில் கையாளப்பட்டுள்ள நவீன உத்திகள் குறித்து ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. அதேபோன்று இந்த ஆண்டு எஞ்சியுள்ள வகுப்புகளுக்கும் அதாவது 2, 3, 4, 5, 7, 8, 10, 12 ஆகிய வகுப்புகளுக்கு வரும் ஜூன் மாதம் புதிய பாடப் புத்தகங்கள் அமலுக்கு வர உள்ளன.
இதையடுத்து வரும் ஜூன் மாதம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த 1.30 லட்சம் ஆசிரியர்களுக்கு புதிய பாடத் திட்டம் குறித்து பல்வேறு கட்டங்களாகப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்

Comments
Post a Comment