கால்நடை மருத்துவ படிப்பு 2019-20 TANUVAS ADMISSIONS
கால்நடை மருத்துவப் படிப்புக்கு வரும் 8-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின்கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு (பிவிஎஸ்சி - ஏ.ஹெச்) 360 இடங்கள் உள்ளன. திருவள்ளூர் மாவட்டம் கோடுவளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள் மற்றும் பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 20 இடங்கள் மற்றும் ஓசூர் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள் உள்ளன. இந்த 3 பட்டப்படிப்புகளும் 4 ஆண்டுகள் கொண்டது. கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புகளுக்கான 360 இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 54 இடங்கள் (15 சதவீதம்) போக மீதமுள்ள 306 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. அதேபோல் உணவுத் தொழில்நுட்ப படிப்பில் 40 இடங்களில் 6 இடங்கள் (15 சதவீதம்) இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த படிப்புகளுக்கு 2019-20-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு www.tanuvas.ac.in மற்றும் www2.tanuvas.ac.in என்ற இணையதளங்களில் மே 8-ம் தேதி காலை 10 மணி முதல் ஜூன் 10-ம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம். தகுந்த சான்றிதழ்களை ஆன்லைனிலேயே பதிவேற்றம் செய்து, விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த வேண்டும். பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தகுந்த சான்றிதழ்களுடன் ஒவ்வொரு படிப்புகளுக்கான விண்ணப்பத்தையும் தனித்தனியாக வரும் ஜூன் 10-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் தலைவர், சேர்க்கைக்குழு (இளநிலை பட்டப்படிப்பு), தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், மாதவரம் பால்பண்ணை, சென்னை - 600 051 என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தகவல் தொகுப்பேடு, சேர்க்கைத் தகுதிகள், தேர்வு செய்யப்படும் முறை உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இணையதளங்களில் கொடுக்கப்பட்டுள்ளன.
செய்தி : தி இந்து தமிழ்

Comments
Post a Comment