என்ஜினியரிங் கட் ஆப் கணக்கிடுவது எப்படி ? பிளஸ் 2 முடித்த மாணவர்கள், இன்ஜினியரிங் படிப்பில் சேருவதற்கான கவுன்சிலிங்கை, தமிழக உயர் கல்வித்துறை, நேரடியாக நடத்த உள்ளது. தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் மற்றும் அரசு இன்ஜினியரிங் கல்லுாரிகளின் பேராசிரியர்கள் அடங்கிய கமிட்டி, மாணவர் சேர்க்கையை நடத்துகிறது. கடந்த ஆண்டில் நடந்த மாணவர் சேர்க்கையின் போது, பிளஸ் 2 தேர்வில், ஒவ்வொரு பாடத்துக்கும் தலா, 200 மதிப்பெண் வீதம் வழங்கப்பட்டது. இதன்படி, கட் ஆப் மதிப்பெண் கணக்கிடப்பட்டது. அதாவது, கணிதத்தில், 200க்கு பெறும் மதிப்பெண், 100 மதிப்பெண்ணாக மாற்றி கணக்கிடப்படும்.இயற்பியல், வேதியியல் பாடங்களின், 200 மதிப்பெண்கள், 50 மதிப்பெண்களுக்கு கணக்கிடப்படும். இறுதியில், மொத்தம், 200 மதிப்பெண்களுக்கு, கட் ஆப் கணக்கிடப்படும்.அதாவது, கட் ஆப், 200 மதிப்பெண்ணில், 50 சதவீதம், கணித மதிப்பெண்ணாகவும், தலா, 25 சதவீதம், இயற்பியல், வேதியியலாகவும் கணக்கிடப்படும். இந்த சதவீதத்தில் இந்த ஆண்டும், எந்த மாற்றமும் இருக்காது என, இன்ஜினியரிங் கமிட்டி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தற்போது, கணித மதிப்பெண், 100க்கு வழங்...