தலையங்கம் - தமிழக கலாச்சாரம் சீரழிந்து விட்டதா ?
தமிழக கலாச்சாரம் சீரழிந்து விட்டதா ? Image courtesy : tutacare.com "நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மாதரை எண்ணி " தமிழகத்தில் தொடரும் பாலியல் கொடூரங்கள் நெஞ்சை உறைய வைக்கின்றன ... சுவாதி படுகொலை , கடந்த ஆண்டு ஒரு அப்பார்ட்மென்டில் ஒரு சிறுமிக்கு நடந்த கொடூரம் யாருக்கும் மறந்திருக்காது , அதனை தொடர்ந்து பல கொடூரங்கள் எண்ணிலடங்கா... பொள்ளாச்சி , சேலம் , மனதை உலுக்கி போடும் கோவை சம்பவம் - என்னதான் பிரச்சனை தமிழ்நாட்டிற்கு... வீரத்திலும் , தியாகத்திலும் உயர்ந்தோங்கிய தமிழர் குடியில் இன்று காமத்திற்கு ஆளாகி பல கொடூரங்களை செய்வது எதனால் ? தண்டனைகள் மட்டுமே இதற்கெல்லாம் தீர்வாகுமா , இயல்பாகவே நீதிக்கும், நேர்மைக்கும் கட்டுபட்டு அறவழியில் பயணிக்கும் தமிழகத்திற்கு ஏன் இந்த அவலநிலை ? ஊற்றுக்கண்ணை தேடி வேரறுப்பதை தவிர வேறு வழியில்லை ... 8 கோடி பேர் வாழும் இம்மண்ணில் வேலி போல இருக்க ஆண்மக்கள் , தாயாக , சகோதரியாக, மகளாக , தோழியாக இருக்கும் பெண்களுக்கு எதிராக வன்புணர்வு செய்வது தகுமா ? எதனால் இந்த காம கொடூரங்கள் , தமிழக ஆண்மக்களிடையே ஒருவித மன...