JACTTO-GEO-வின் வேலைநிறுத்தப் போராட்டம் யாருக்காக?
👫👭👬🚶🏻♀🚶🏻❓❓❓❓
*JACTTO-GEO-வின் வேலைநிறுத்தப் போராட்டம் யாருக்காக?*
_✍🏽செல்வ.ரஞ்சித்குமார்_
*பொதுமக்களே!*
*பொதுநலன் விரும்பிகளே!*
_தங்களின் சுயசிந்தையைச் சுண்டிவிடுவதற்காகவே இப்பதிவு._
JACTTO-GEO-வின் கோரிக்கைகளை உங்கள் பார்வையின்படி 3 வரிகளில் சுருக்கிவிடலாம்.
1. ஊதிய முரணற்ற முழுமையான புதிய ஊதியக்குழு ஊதியம்.
2. 2003-ற்கு முன்னிருந்த படியான ஓய்வூதியம்.
3. காலமுறை ஊதியம்
சுருக்கிய 3-லும் இருப்பது ஊதியமே!
*அதாங்க காசு - பணம் - துட்டு - டப்பு - மணி.*
💸💵💴💶💷💰💸💵💴💶💷💰
நீங்கள் நினைப்பது போல இது காசுக்கான போராட்டம் தான். *ஆனால் இது அரசு ஊழியர் & ஆசிரியர்களின் காசுக்காக மட்டுமேயான போராட்டம் அல்ல.*
உங்களின் பார்வையின் படியான 'ஊதியம்' என்ற பதத்தைத் தாண்டிய உள்ளார்ந்த விடயத்தைப் பற்றிச் சிந்திக்கப் பொறுமையுடன் நகர்த்துங்கள்.
ஒரு நாட்டின் சீரான இயக்கம் / வளர்ச்சி என்பது அரசு இயந்திரத்தின் இயக்கத்தைப் பொறுத்ததே. இதில் அலுவல் & கல்வி சார் பணிகள் அடங்கும். அரசு இயந்திரத்தின் இயக்கம் என்பது அரசின் கீழ் பணியாற்றும் ஊழியர்களைப் பொறுத்ததே. இதில் அரசு ஊழியரும் ஆசிரியரும் அடங்கிவிடுவர்.
ஒரு நாட்டின் சீராண இயக்கம் / வளர்ச்சியைத் தடுக்க வேண்டுமெனில் அரசு ஊழியர் & ஆசிரியர்களின் பணியைப் பழுதாக்கினாலே போதும் என்பது எங்க தாத்தா காலத்து உத்தி.
*சரி இவர்களின் பணியை எப்படித் தடுப்பது?* கையப்புடிச்சோ கட்டிப்போட்டோ அல்ல. அவர்களுக்குரிய நியாயமான உரிமைகளை குறிப்பாக பொருளாதார உரிமைகளை மறுத்தாலே போதும். அவர்கள் தானாகவே தடுமாற்றம் அடைந்து விடுவர் என்பதும் தாத்தா காலத்து உத்தியே!
*நீங்களோ நானோ 'நாளைக்கு நம்ம பிள்ளைய படிக்க வச்சு கவுர்மென்ட்ல வேலைக்குச் சேத்து விட்றனும்னு' நினைப்பது எதனால்? உழைக்கும் காலத்தில் கிடைக்கும் தடையற்ற உறுதியான நியாயமான ஊதியத்திற்காகவும் பணி ஓய்வு பெற்றபின் கிடைக்கும் ஓய்வூதியத்திற்காகவும் தானே!*
அதே காரணத்திற்காகத்தான், ஊதியத்தில் 10 ஆண்டுகளாக ஆட்சியாளர்கள் ஏற்படுத்தியுள்ள இழப்பிற்காகவும், 14 ஆண்டுகளாக மறுக்கப்பட்டுள்ள ஓய்வூதியத்திற்காகவும் தான் இன்று அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் போராடுகின்றனர்.
*சரி இவையெல்லாம் இவர்களுக்குக் கிடைக்காமலே போய்விட்டால் என்னவாகும்?* வீட்டில் ஏற்படும் பொருளாதார நெருக்கடியால், ஊழியரின் பணியில் சுனக்கம் ஏற்படுவதோடு ஊழலும் மலிந்து விடும். விளைவு அரசு இயந்திரம் ஊழல் எனும் ஆயுதத்தால் சுக்குநூறாக்கப்பட்டு நாட்டின் வளர்ச்சியே தடைபடும்.
*'இவிங்களுக்கு சம்பளத்த ஏத்தித் தர்ரதுக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் என்னடா சம்பந்தம்' எனத் தோன்றலாம்.*
நாட்டின் வளர்ச்சி என்பது அதாவது உங்களின் வளர்ச்சி என்பது 70% மாத ஊதியம் பெறுவோரை மட்டுமே சார்ந்துள்ளது.
எப்படியெனில், *நீங்கள் உற்பத்தி செய்யும் பொருளை நீங்கள் நிர்ணயிக்கும் விலையில் வாங்கிக் கொள்பவன் மாத ஊதியம் பெறுபவனே!*
நீங்கள் வேறேந்தத் தொழில் புரிவோராக இருப்பினும் உங்களின் வேலைக்கான கூலி என்பதும் மாத ஊதியம் பெறுவோரிடமாகத்தான் இருக்கும்.
மாத ஊதியம் பெறுவோரில் *நாட்டின் ஒட்டுமொத்தப் பணப்புழக்கத்தில் 80% நேரடியாகவோ பிறர் வழியிலோ அரசு ஊதியம் பெறுவோரைச் சார்ந்தே இருக்கும்.* இவர்களில் தங்களின் அரசுப் பணி ஓய்விற்குப்பின் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்களும் அடங்குவர்.
"ஏன்டா மொத்த மக்கள் *தொகைல நீங்க 10% கூட இல்லையேடா"* என்று கூட நீங்கள் கேட்கலாம். ஆசிரியர் அரசு ஊழியரின் சதவீதம் வேண்டுமானால் குறைவாக இருக்கலாம். ஆனால், அவர் பெறும் ஊதியத்தைச் செலவிடுவோர் என்று பார்த்தால் அவரின் தாத்தா முதல் பெயரன் வரை குறைந்தது 3 தலைமுறையினராவது அடங்குவர் அல்லவா.
எனவே தான் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை, விலைவாசி உயர்வினைக் கருத்தில் கொண்டு ஊதியக்குழு அமைத்து புதிய ஊதியத்தினை அரசு தன் ஊழியருக்கு வழங்குகிறது.
ஒவ்வொருமுறை *ஊதியக்குழு பணப்பலன்களை அரசு ஊழியன் பெற்றபின்னர் மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்து ஒட்டுமொத்த மக்களின் பொருளாதார உயர்விற்கும் அது வழிவகுக்கும்.* வழிவகுத்தே வந்துள்ளது.
எனவே, ஊதியம் தொடர்பான அரசு ஊழியர் & ஆசிரியர்களின் கோரிக்கைகளில் உள்ளூர இருப்பது எமக்கான நலன் மட்டும் அன்று. அரசு ஊழியர் / ஆசிரியர் அல்லாதோர் விற்கும் பொருளை வாங்குவதற்கும், தன் கீழ் / தனக்காகப் பணியாற்றும் அமைப்பு சாரா ஊழியர்களின் ஊதியத்திற்காகவுமே.
இப்போதும் JACTTO-GEO போராடுவது ஊதிய முரணற்ற ஊதியக்குழுவின் முழுமையான ஊதியத்திற்காகவும் குறிப்பாக 10 ஆண்டுகளாகக் குறைத்துக் கொடுத்து வந்த ஊதியத்திற்காகவும், 14 ஆண்டுகளாகத் தராது பறித்துவிட்ட ஓய்வூதியத்திற்காகவும்! காலமுறை ஊதியத்திற்காகவுமே!
சரி, *இதெல்லாம் குடுக்காம அரசு எந்திரத்த ரிப்பேர் ஆக்குறதால யாருக்கு என்னயா இலாபம்?*
நாம கெட்டுப் போனும்னு நம்ம ஆட்களே செய்துட்டாகளோ?
இல்ல, படத்துலேலாம் சொல்லுவாகளே! இது வெளிநாட்டுச் சதினு. அப்டியா யிருக்குமோ?
வளர்ச்சிய தடுக்குற வெளிநாட்டுச் சதினா இப்பதேன் இங்க வெள்ளக்காரனுவலே இல்லயே! ஒருவேல கொள்ளக்காரனுவனால இருக்குமோ?
பயபுள்ளய பலவருசமா அதுகதான அழயுதுக. ஆனா. . . . அவியலுக்கும் இதுக்கும் என்னடா கனெக்சனு?
இப்படி பல கேள்விகள் ஒருவேளை உங்களுள் எழுந்தால். . .
*JACTTO-GEO போராட்டத்தை எடுத்தோம் கவுத்தோம் என எள்ளிநகையாடாது ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் போராட்டக் களத்தில் எழுப்பும் குரல்களைத் (கோசங்களை) தொடர்ந்து கவனித்து வாருங்கள்.*
_அடுத்த பதிவினூடாய் அவற்றை எல்லாம் அடையாளப்படுத்திட முயற்சிக்கிறேன்._
_*இவண்,*_
*JACTTO-GEO போராளிகளுக்காக*
*_✍🏽செல்வ.ரஞ்சித்குமார்_*

Comments
Post a Comment