இதை கேட்க நாதி இல்லையா ???
*இதை கேட்க நாதி இல்லையா?*....
*மன வேதனையுடன்...*
தலையங்கம்
✒அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் போராட்டம் 8 வது நாளை எட்டியுள்ளது...
✒சதா ஆசிரியர்களை கரித்து கொட்டியது போதும் , 9 கோரிக்கைகள் அதில் பணம் சார்ந்த கோரிக்கைகள் 4 மட்டுமே...
✒நிதி இல்லை புரிகிறது வேறு 5 கோரிக்கைகளை பரிசீலிக்கலாமா ? இல்லையா ?
✒அரசு என்பது அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் இணைந்து பணியாற்றினால் மட்டுமே நலதிட்டங்கள் மக்களை சென்றடையும்...
இதில் யார் சக்தி படைத்தவர் என்பதல்ல...
✒அரசு இல்லாமல் அரசு ஊழியர்களும் இல்லை , அரசூழியர்கள் இல்லாமல் அரசும் இல்லை....
✒அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஊதியம், பணிபாதுகாப்பு , சலுகைகள் வழங்க வேண்டியது அரசின் கடமை , கேட்பதும் மறுப்பதும் , பரிசீலிப்பதும் வல்லதரசு....
✒ஆனால் வகுப்பறையில் பாடம் நடத்த வேண்டிய ஆசிரியர்கள் ரோட்டில் ஒருவாரமாக போராடி வருவதும், ஏற்கனவே அதிக சம்பளம் என அரசு கூறுவதும் நியாயமானதா ?
✒ஒரு ஆசி்ரியர் ஒரு சமுதாயத்தை உருவாக்குகிறார், அவர் வயிறாற உண்டு , அவர் குடும்பம் தன்னிறைவு பெற்று, நாலு இடங்களை பார்த்து படித்து அவர் பொருளாதார தன்னிறைவு பெற்றால் மட்டுமே அவரிடம் படிக்கும் மாணவர்களை ஊக்கமளித்து முன்னேற்ற முடியும்... அவர் வறுமையில் வாடி அவரே தேறாத போது எந்த முகத்தை வைத்துக்கொண்டு மாணவர்களை தேற்றப்பார்ப்பார்....
*✒ஆசிரியர்களுக்கு அவர்களுக்குரிய கல்வித்தகுதி, பணி அனுபவம் இதனோடு மத்திய அரசின் நிதிக்கொள்கையின்படியே ஊதியம் நிர்ணயம் செய்யப்படுகிறது...*
(ஓசியில வாரி வழங்கிவிடவில்லை...)
✒தாங்கள் மாதமாதம் கட்டிய CPS பணம் , ஊதிய முரண் , 21 மாத நிலுவை இதுமட்டும் தானே நிதி சார்ந்தது... மீதமுள்ள 6 கோரிக்கைகளை நிதி அல்லாதவற்றை கூட அரசுக்கு செய்ய மனமில்லையா ?
✒ஆசிரியர்களை நள்ளிரவில் கைது செய்வதும், தடியடி நடத்துவதும், கொடும் குற்றங்கள் செய்வதவர்களோடு சிறையில் அடைப்பதும் இதுவா புரட்சிதலைவி மாண்புமிகு அம்மாவின் அரசுக்கு அழகு....
✒உங்கள் பிள்ளை ஒருவேளை நீங்கள் உணவளிக்க மறந்தாலும் உங்கள் ஆசிரியர் உணவளித்து, சுகாதாரம் கற்றுக் கொடுத்து மற்றுமொரு பெற்றோராய் விளங்கும் தமிழக ஆசி்ரியர்களை சிறையிலடைப்பது தகுமா?
✒மனுநீதி சோழனும், முல்லைக்கு தேர் கொடுத்த பாரியும், மயிலுக்கு போர்வை கொடுத்த பேகனும், பெரிய கோவில் கல்லணை கட்டிய சோழனும், கல்வி வள்ளலும், புரட்சி தலைவரும், கலைஞரும் ஆண்ட மண்ணிலே இந்த அநியாயம் நிகழ்த்தாலாமோ ?
✒சமூக பொறுப்பு அதிகமுள்ள ஆசிரியர்கள் தேர்வு நேரத்தில் போராட்டத்திற்கு தள்ளியது யார்?
✒கற்றவர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு , இங்கோ சிறையும் , கைதும் , ரிமாண்ட்டும் தான் சிறப்பு...
✒ஆசிரியர்களையே அடித்து நொறுக்கினால் சமான்யர்கள் நிலை?
✒நாளை உங்கள் வீட்டிலும் அரசு ஊழியர் ஆசிரியர் வருவான், அவனுக்காகவும் தான் இந்த போராட்டம்...அறப் போராட்டம் அவ்வளவு பெரிய குற்றமா ?
*✒சம்பள பிடித்தம், துறை நடவடிக்கை பணியிடைநீக்கம், மிரட்டுதல், ஏகப்பட்ட செக்ஷனில் வழக்குப்பதிவு ? நள்ளிரவு கைது , புழல் வேலூர் , மதுரை பல இடங்களில் சிறைவைப்பு ... அடி உதை .... இதை கேட்க நாதி இல்லையா ?*
மன வேதனையுடன்
*R.R*
✍✍✍✍✍✍
9 கோரிக்கைகள்...

Comments
Post a Comment