ஜாக்டோஜியோ நான்காவது நாள் (25.01.19) வேலைநிறுத்தம்...

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் 10 லட்சம் பேர் கடந்த 22ந் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்..
நேற்று தமிழகமெங்கும் மாவட்ட தலைநகரில் நடைபெற்ற மறியல் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு லட்சகணக்கானோர் கைது செய்யப்பட்டு பின்னர் மாலையில் விடுவிக்கப் பட்டனர்...
இதனிடையே ஜாக்டோ ஜியோ அமைப்பினரை அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்காமல் அச்சுறுத்தும் வகையில் வேலைநிறுத்தம் செய்வோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவதாகவும், தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதாகவும் பயமுறுத்தி வருவது ஆசிரியர்கள் அரசு ஊழியர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது...
எனினும் திட்டமிட்டபடி இன்று (25.1.19) நான்காவது நாள் வேலைநிறுத்தம் மற்றும் மாவட்ட மறியல் நடைபெறும் என ஜாக்டோஜியோ அறிவித்துள்ளது.
நாளை ஜாக்டோஜியோ உயர்மட்டக் குழு கூட்டத்தில் அடுத்தகட்ட நகர்வு குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
நேற்றை விட இன்று கூடுதலாக ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்..
வாழ்வாதார கோரிக்கைகளுக்காக போராடுபவர்களை அழைத்து பேசி சுமுக தீர்வு எட்டவேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது..

Comments
Post a Comment