ஆசிரியர் இயக்க வரலாறு - பகுதி 2
🛡💪🏼🛡💪🏼🛡💪🏼🛡💪🏼
*ஆசிரியர் இயக்க வரலாறு* - பகுதி 2
💪🏼🛡💪🏼🛡💪🏼🛡💪🏼🛡
*நாட்டின் முதல் வேலைநிறுத்தம் :*
பக்கிங்காம் கர்னாடிக் ஆலைகளின் நூற்பாலைப் பிரிவுத் தொழிலாளர்கள் *20.5.1921*-ல் முறைப்படி நிர்வாகத்திற்கு அறிவிக்கை கொடுத்து, விதிகளின்படி வேலை நிறுத்தத்தைத் தொடங்கினார்கள். அதனால் சட்டப்படி நடந்த இதை நாட்டிலேயே *முதன் முதலில் நடந்த அமைப்புரீதியான வேலை நிறுத்தம்* என்று குறிக்கப்படுகிறது. விரைவில் பக்கிங்காம் ஆலைத் தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் இணைந்து கொண்டனர்.
*☀அரசுக்கு ஆதரவாகி போராட்டத்தைத் தடுத்த ஆசிரியர் :*
சென்னை ராஜதானி சட்டசபைக் கவுன்சிலில் அரசாங்கத்தின் நியமன உறுப்பினராக இருந்த ராவ் பகதூர் எம்.சி.ராஜா அவர்களிடம் பிரிட்டிஷ் அரசாங்கம் பின்னி ஆலை வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதை ஏற்றுத் தாழ்த்தப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த பின்னி ஆலைத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க மாட்டார்கள் என்று அறிவித்தார்.
தொழிலாளர் வேலை நிறுத்தத்திற்குப் பக்க பலமாக நின்ற திரு.வி.க.வைப் போல *ஆதரிக்காத எம்.சி. ராஜாவும் சென்னை ராயப்பேட்டை வெஸ்லி பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர்.* ராஜாவை அழைத்துப் பேசிய திரு.வி.க., தாழ்த்தப்பட்டோரும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
_“ஆங்கிலேய ஆட்சியில்தான் தாழ்த்தப்பட்டோருக்குத் தடையில்லாத கல்வி, வேலை வாய்ப்புகள் கிடைப்பதோடு சமூக அங்கீகாரமும் ஓரளவுக்காவது சாத்தியமாகியுள்ளது. அரசின் வேண்டுகோளை மீறி வேலை நிறுத்தத்தை என்னால் ஆதரிக்க இயலாது”_ என்று கூறிவிட்டார், எம்.சி.ராஜா.
*☀தொழிலாளர்களின் உயிர்ப்பலிகள் :*
தாழ்த்தப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலைக்குச் சென்றபோது மற்றவர்கள் அவர்களைத் தடுத்தனர். வேலைக்குச் செல்ல போலீசார் பாதுகாப்பு அளிக்க - நிலைமை கட்டுக்கடங்காமல் போக போலீசார் நடத்திய *துப்பாக்கிச் "சூட்டில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களில் 7 பேர் குண்டடிபட்டு இறந்தனர்.* பலர் காயமுற்றனர்.
போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்த தாழ்த்தப்பட்டோர் காயமின்றித் தப்ப தொழிலாளர்களிடையே ஏற்பட்ட பிளவால் கலவரமாக மாறி புளியந்தோப்பில் *தாழ்த்தப்பட்டோரின் நூறு குடிசைகள் கொளுத்தப்பட்டன. தாழ்த்தப்பட்டோர் பலர் மாண்டனர்.* 'புளியந்தோப்புக் கலவரம்' அரசச் சூழ்ச்சியால் தொழிலாளர் பிளவுக்கு உட்படுத்தப்பட்டு நிகழ்ந்தேறியது.
*☀முதல் தொழிற்சங்கத் தலைவரின் சூளுரை :*
சென்னை தொழிலாளர் சங்கத்தின் தலைமையில் நடைபெற்ற வேலை நிறுத்தப்போராட்டம் 6 மாதங்கள் நடைபெற்றது. *வேலை நிறுத்த இழப்புக்காகத் தொழிற்சங்கம் நஷ்டஈடு வழங்க*வேண்டுமென்று *சென்னை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.*
_"ரூபாய் 10-ல் வாழ்க்கை நடத்தும் பொதுநல ஊழியன்நான், அணிந்திருக்கும் உடையுடன் ஓரிரு மாற்று உடைகள் மட்டுமே எனக்குச் சொந்தம். இவைகளை ஏலம்விட்டுப் பணத்தை மில்லுக்குக் கொடுங்கள். தொழிலாளர்களுக்காக வெறும் கோவணத்துடன் போராடுவேன்"_ என்று *தொழிற்சங்கத் துணைத்தலைவர்களுல் ஒருவரான சக்கரைச் செட்டியார்* தெரிவித்தார். இந்நிகழ்வு தொழிற்சங்கங்களுக்கு உணர்வூட்டின.
*1926*-ல் பிரிட்டிஷ் அரசு *தொழிற்சங்கச் சட்டம்* இயற்றியது. தொழிற்சாலைகளில் சங்கம் அமைத்திடவும், வெளியார் தலைமைக்கும் அனுமதித்தது.
_தொழிற்சங்கங்களின் தொப்புள் கொடியைப் பார்த்தோம். அடுத்த பதிவில் ஆசிரிய இயக்கங்களின் ஆணிவேரைப் பார்ப்போம்_
*நன்றி (கூடுதல் தரவு):*
_திண்ணை, கீற்று, நியூ செஞ்சூரியன் & நக்கீரன்_

Comments
Post a Comment