ஆசிரியர் இயக்க வரலாறு - பகுதி 1
ஆசிரியர் இயக்க வரலாறு!!
💪🏼🛡💪🏼🛡💪🏼🛡💪🏼
*மூத்த சங்கங்களை அனுதினமும் வசைபாடும் தோழர்களின் கனிவான பார்வைக்காக.... ஆசிரியர் இயக்க வரலாறுகளை மூத்த சங்கங்கள் பெற்று தந்த உரிமைகளை பல தளங்களில் தகவல்களை திரட்டி தொடராக பதிவிட எண்ணுகிறேன்....*
💪🏼🛡💪🏼🛡💪🏼🛡💪🏼🛡
*ஆசிரியர் இயக்க வரலாறு - 1*
*தொழிற்சங்கங்களின் தொப்புள்கொடி!*
*தோழர்.மா.ச.முனுசாமி* (மேனாள் மாநிலத் தலைவர் - TNPTF) அவர்களின்,
*ஆசிரியர் இயக்க வரலாற்றில் எனது நினைவலைகள்!* நூலினை அடியொற்றி. . .
*ஆசிரியர் இயக்க வரலாறு*
*பகுதி 1 : தொழிற்சங்கங்களின் தொப்புள்கொடி!*
நமது தேசத்தின் வரலாற்றைப் போலவே ஆசிரியர் இயக்கத்தின் வரலாறும் தொன்மையானதாகும்.
1914-18 முதல் உலகப்போருக்குப்பின் மக்களின் வாழ்வுநிலை மோசமடைந்தது. இதனை ஈடுசெய்திடச் சம்பளம் பெறுபவர்களுக்கு *வார் அலவன்ஸ் (War Allowance) வழங்கப்பட்டது. அதன் பரிணாமமே விலைவாசி உயர்வை ஈடுசெய்திடத் தற்போதும் வழங்கப்படும் அகவிலைப்படி.*
*1917-ல் சோவியத் புரட்சி*யின் தாக்கம் உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தியாவிலும் இவ்வுணர்வுகள் மேலோங்கின. இவ்வுணர்ச்சிகளின் எழுச்சியால் *1919-ல் அமைக்கப்பட்ட சர்வதேசத் தொழிலாளர் சங்கம்* (International Labour Organization : ILO) சங்கம் அமைக்கும் உரிமையை வழங்கியது.
பிரிட்டிஷ் அரசும் இந்தியர்களும் சங்கங்கள் அமைத்துக்கொள்ள அனுமதித்தது. விலை உயர்வை ஈடுசெய்திட ஊதிய உயர்வுக் கோரிக்கைகள் எழுந்தன. *ஊதியங்கள் ரூ.17.5-லிருந்து ரூ. 30-ஆகவும், ரூ. 29-லிருந்து ரூ.41-ஆக*வும் உயர்வளிக்கப்பட்டன.
*☀முதல் தொழிற்சங்கத்திற்கு வித்திட்ட & பொறுப்பேற்ற ஆசிரியர்கள்*
சென்னை மாநகரில் புகழ்பெற்ற பி&சி-பென்னி என அழைக்கப்படும் பக்கிங்காம், கர்நாடிக்மில் தயாரிப்புகள் (துணி, போர்வை போன்றவை) நம்பிக்கையையும், வரவேற்பையும் பெற்றிருந்தன. இராணுவ ஆடைகளுக்கான துணிகள் தயாரிக்கப்பட்ட இந்த ஆலையில் தொழிலாளர்கள் "பின் தூங்கி முன்எழும் பெண்' போன்றவர்கள்; சூரியனைப் பார்க்காதவர்கள்; சூரியன் தோன்றுவதற்கு முன்பாக ஆலைக்குள் நுழைந்துவிட்டு சூரியன் மறைந்த பின்னரே ஆலையைவிட்டு வெளியில் வரவேண்டும். அவ்வளவு கடுமையான சட்டம்.
தங்களுக்குள்ளேயே வெதும்பிக் கொண்டிருந்த தொழிலாளர்களுக்கு அறநெறி, சன்மார்க்கக் கருத்துக்களைப் போதிக்கத் *தமிழ்த்தென்றல் திரு.வி.க.* தொழிலாளர்களின் குடியிருப்புகளுக்குச் சென்றபோது அவர்களின் குமுறலைக் கேட்டுக் கலங்கினார். வழக்கறிஞர் பி.பி.வாடியா & அன்னிபெசன்ட் அம்மையாரைப் பெரம்பூர் அழைத்து வந்தார்.
*திரு.வி.க, வழக்கறிஞர் பி.பி.வாடியா, சக்கரை செட்டியார், சிந்தனைச் சிற்பி தோழர்.சிங்காரவேலர்* உள்ளிட்டோரின் முயற்சியால் *27-04-1918*-ல் உருவானதே *சென்னைத் தொழிலாளர் சங்கம்* (Madras Workers Union : MWU) ஆகும். இதுவே *நாட்டின் முதல் தொழிற்சங்கமும் ஆகும்.* இதன்
*தலைவர் :*
பி.பி. வாடியா
*துணைத்தலைவர்கள் :*
திரு.வி.க & சக்கரை செட்டியார்
*செயலாளர்கள் :*
செல்வபதி செட்டியார் & ராமானுஜூலு
நாட்டின் முதல் தொழிற்சங்கம் அமைய முழுமுன்முயற்சி எடுத்த *திரு.வி.க சென்னை ராயப்பேட்டை வெஸ்லி பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர்.* இவருடன் இணைந்து துணைத் தலைவராக இருந்த *சர்க்கரை செட்டியார்* இரண்டு ஆண்டுகள் *பெண்கள் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றியவர்.*
*☀தொழிற்சங்க வளர்ச்சி :*
தொழிற் சங்கங்களை அமைப்பதற்கும், தொழிலாளர்களின் போராட்டத்திற்கும் பேருதவி செய்த தென்னிந்தியாவின் முதல் பொதுவுடமைவாதியான 'சிந்தனைச் சிற்பி' தோழர்.சிங்காரவேலர் உள்ளிட்டோரால், எம்.எஸ்.எம் இரயில்வே தொழிலாளர் சங்கம், டிராம்வே தொழிலாளர் சங்கம், மண்ணெண்ணெய்த் தொழிலாளர் சங்கம் முதலிய தொழிற்சங்கங்கள் 1919-ல் அமைக்கப்பட்டன. இந்தத் தொழிற்சங்கங்களை, திரு .வி.க, சக்கரை செட்டியார், ஈ.எல். அய்யர், வ.உ.சி, கஸ்தூரி ரங்க அய்யங்கார், எம்.எஸ். சுப்பிரமணிய அய்யர் முதலிய காங்கிரஸ் தலைவர்கள் வழி நடத்தினார்கள்.
முதல் மத்திய தொழிற்சங்க அமைப்பான 'அகில இந்தியத் தொழிற்சங்க காங்கிரஸ்' (AITUC) 1920 அக்டோபரில் துவக்கப்பட்டது. இதன் முதல் தலைவராக லாலா லஜபதிராய் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜவஹர்லால் நேரு, சுபாஷ் சந்திர போஸ் ஆகியோரும் இந்த அமைப்பின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டனர்....
💪🏼🛡💪🏼🛡💪🏼🛡💪🏼🛡
*நாட்டின் முதல் வேலைநிறுத்தம்.... நாளைய பகுதியில்...*
💪🏼🛡💪🏼🛡💪🏼🛡💪🏼🛡
*(தொடரும்....)*

Comments
Post a Comment