TNPTF அரசாணை எரிப்பு போராட்டம்...
அரசாணை எரிப்பு போராட்டம்...
தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் இன்று தமிழகமெங்கும் (டெல்டா மாவட்டம் தவிர) ஊதியக்குழு அரசாணைகள் 234 மற்றும் 303 , எரிக்கும் போராட்டம் எழுச்சியுடன் நடத்தப் பட்டது...
படம் : TNPTF மாநில தலைவர் ஊடக பேட்டி
தமிழ்நாட்டில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ 17 ஆயிரம் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது , மத்திய அரசில் இதே கல்வித்தகுதியில் பணியாற்றும் ஆசிரியர்களுடைய ஊதியத்தை தமிழக ஆசிரியர்களுக்கு மாநில அரசு வழங்காமல் ஊதியக்கட்டில் இழப்பு ஏற்படுத்தி ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை பாதிப்படைய செய்துள்ளது...
இழந்த ஊதியத்தை மீட்க பத்தாண்டுகளாக பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி...
சமீபத்தில் இந்த ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி எதிர்கட்சிகளை பங்கேற்க செய்து நீதி கேட்கும் வகையில் மாநாட்டினை நடத்தியது நினைவு கூறத் தக்கது.
இதன் தொடர்ச்சியாக தமிழகமெங்கும் மாவட்ட தலைநகரங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் அரசாணைகளை எரிக்கும் போராட்டம் நடத்தப்பட்டு ஆயிரகணக்கான ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..
பல இடங்களில் கைது செய்யப் பட்ட ஆசிரியர்கள் தற்போது வரை விடுதலை செய்யப்படாமல் உள்ளனர்..
உடனடியாக பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் ஊதிய இழப்பினை சரிசெய்ய அரசு முயல வேண்டும் என்பதே கடைக்கோடி கிராமத்து ஆரம்ப பள்ளி ஆசிரியர்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது...

Comments
Post a Comment