கஜா புயல் நிவாரண உதவி - கிருஷ்ணகிரி மாவட்டம்
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கிட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து, ஆட்சியர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக நல அமைப்புகளிடமிருந்து நிவாரண உதவிகள் பெற்று புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
எனவே, இம்மாவட்ட பொதுமக்கள், வணிகர்கள், வணிகர் சங்கங்கள், தொழில் நிறுவனங்கள், அறக்கட்டளைகள், சமூக நல அமைப்புகள் மற்றும் நலச் சங்கங்கள் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் வகையில் பால் பவுடர், அரிசி, பருப்பு, குடிநீர் கேன்கள், குடிநீர் பாட்டில்கள், போர்வைகள், தரை விரிப்புகள், பிஸ்கெட், பிரட் உள்ளிட்ட இதர உணவுப் பொருள்கள், மருந்துகள், வேட்டிகள், கைலிகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான உடைகள் ஆகியவற்றை தாராளமாக வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நிவாரணப் பொருள்களை கிருஷ்ணகிரி, ஒசூர் நகராட்சி அலுவலகங்களில் உள்ள நிவாரண பொருள்கள் சேகரிக்கும் மையங்களில் ஒப்படைக்கலாம். மேலும், தொடர்புக்கு கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் 9445000429, கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையர் 9445103950, ஒசூர் வருவாய் கோட்டாட்சியர் 9445000430, ஒசூர் நகராட்சி ஆணையர் 7397396250 ஆகியோரின் செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

Comments
Post a Comment