யூலிப் திட்டங்கள்
யூலிப் திட்டங்கள்
யூலிப்’ என, குறிப்பிடப்படும் ’யூனிட் லிங்க்டு இன்ஷூரன்ஸ் பிளான்’ வரிசேமிப்புக்கான பிரபலமான முதலீட்டு வாய்ப்புகளில் ஒன்றாக இருக்கிறது. பாலிசிதாரர்களுக்கு, முதலீட்டு அம்சத்துடன் கூடிய காப்பீடு பாதுகாப்பை இவை அளிக்கின்றன. இந்த வகை திட்டம் தொடர்பாக, அதிகம் அறியப்படாத அம்சங்கள்:
நிதி மாற்றம் :
யூலிப் திட்டங்கள், இன்கம் பண்ட் (கடன்சார் முதலீடு, மிதமான ரிஸ்க்), பாலன்ஸ்ட் பண்ட் (சமபங்கு மற்றும் கடன் சார் முதலீடு, மிதமானது முதல் அதிக ரிஸ்க்), லார்ஜ் கேப் பண்ட் ஆகிய நிதிகளில் முதலீடு செய்ய கிடைக்கின்றன. இவற்றில் ஒரு வகை நிதியை தேர்வு செய்தாலும், சந்தை போக்கிற்கு ஏற்ப, திட்டத்தை இடையே மாற்றிக்கொள்ளலாம்.
முதிர்வு காலம் :
யூலிப்கள் மூலம் கிடைக்கும் முதிர்வு தொகையின் பலன், சந்தை போக்கிற்கு ஏற்ப அமையும். எனவே, முதிர்வு காலத்தை மொத்த முதிர்வு தொகை அல்லது தவணையாக முதிர்வை தள்ளி வைத்து, எப்போது வேண்டுமானாலும் விலக்கி கொள்ள வாய்ப்பு அளிக்கும் திட்டத்தை,தேர்வு செய்ய வேண்டும். -
அதிக பிரீமியம் :
யூலிப் திட்டங்களில் சம் அஷ்யுர்டு தொகையை எப்படி பெற வேண்டும் என்பதை தீர்மானிக்கலாம். ஆண்டு பிரீமியமை விட ௫ மடங்கு, ௭ மடங்கு அல்லது ௧௦ மடங்கு எனும் வாய்ப்புகள் உள்ளன. இவை பாலிசிக்கு ஏற்ப அமையும். பாலிசிதாரர் இறக்கும் சூழலில் கிடைக்கும் தொகை அதிகமாக இருக்க, அதிக சம் அஷ்யுர்டை தேர்வு செய்ய வேண்டும்.
வரிச்சலுகை :
யூலிப் பாலிசிகள் வருமான வரிச்சட்டம், 80 சி பிரிவின் கீழ் வரி விலக்கிற்கு உரியவை. முதிர்வு மற்றும் டெத் கிளைம் வரி விலக்கு உள்ளவை. ஆனால், வரிச்சலுகை பெற சம் அஷ்யூர்டு தொகை ஆண்டு பிரீமியமை விட 10 மடங்காக இருக்க வேண்டும். அதற்கு குறைவாக தேர்வு செய்யக்கூடாது.
கட்டணங்கள் :
யூலிப் திட்டங்களை நிர்வகிக்க, பாலிசி நிர்வாக கட்டணம் உள்ளிட்ட, பல வகை கட்டணங்கள் உண்டு. இந்த கட்டணங்கள் பாலிசிதாரரின் யூனிட்களில் கழித்து கொள்வதன் மூலம் பெறப்படுகின்றன. எனவே, பாலிசி திட்டம் தொடர்பான கட்டண விகிதங்கள் எவை என்பதை, நன்றாக அறிந்திருக்க வேண்டும்.
நன்றி ; தினமலர்
நாள் : 25.9.18

Comments
Post a Comment