கலைஞர் - புகழாஞ்சலி
கலைஞர் மு.கருணாநிதி - என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே! 😭😭
😭கலைஞர; மு.கருணாநிதி!!😭

🌄 கருணாநிதி அவர்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், முன்னாள் தமிழக முதல்வரும் ஆவார். இவர் இந்திய அரசியலில் தொடர்ந்து ஒரு பங்கு வகித்த மிக முக்கியமான மூத்த அரசியல் பிரமுகர்களுள் ஒருவர். சமூகப் பணியில் அவருக்கு இருந்த பேரார்வமே, தமிழ்நாட்டின் தலைச்சிறந்த முதலமைச்சராக அவரை செயல்பட வைத்தது. இவர் 5 முறை தமிழகத்தின் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார்.
பிறப்பு :
🌄 டாக்டர் மு.கருணாநிதி 1924ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் தேதி நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை என்ற கிராமத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் தட்சிணாமூர்த்தி.
🌄 இவர் சிறுவயதிலேயிருந்தே தமிழ் இலக்கியம் மீது ஆர்வம் கொண்டிருந்தார். தமிழ் திரையுலகில் திரைப்படங்களுக்கு வசனங்கள் எழுதுவதை தவிர, பல்வேறு கவிதைகள், புத்தகங்கள், வரலாற்று நாவல்கள், நாடகங்கள், கட்டுரைகள் போன்றவற்றையும் எழுதியிருக்கிறார்.
🌄 'தூக்குமேடை" நாடகத்தின் போது எம்.ஆர்.ராதா, இவருக்கு 'கலைஞர்" என்ற பட்டம் அளித்தார். பின்பு அதுவே நிலைத்து விட்டது. இவர் திரைக்கதை எழுதிய பராசக்தி, மனோகரா, மருதநாட்டு இளவரசி, மந்திரிகுமாரி போன்ற படங்கள் மிகவும் பிரபலம் பெற்றது.
அரசியல் :
🌄 கருணாநிதி தன்னுடைய 14வது வயதில் நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவரான அழகிரிசாமியின் பேச்சின்பால் ஈர்க்கப்பட்டு, அரசியலில் ஈடுபட்டார்.
🌄 1942ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 10ஆம் தேதியன்று, தனது பத்திரிக்கையான 'முரசொலியை" தொடங்கினார். அன்று முதல், இந்த பத்திரிகையின் ஆசிரியராகவும், பதிப்பாளராகவும் இருந்து வந்தார். எழுத்துத்திறன் கொண்ட கருணாநிதி அவர்கள், தனது பத்திரிகைகள் மூலமாக தனது கட்சி உறுப்பினர்கள் பற்றியும், அரசியல் நிலைப்பாட்டையும் முன் வைத்தார்.
🌄 1957ல், அவர் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் குளித்தலையிலிருந்து, முதல்முறையாக மாநில சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1961ல், தி.மு.க. கட்சியில் சேர்ந்தார். பின்னர் அதன் பொருளாளராகவும் நியமிக்கப்பட்டார். அடுத்த ஆண்டில் எதிர்க்கட்சி தலைவரானார். 1967ல் திமுக கட்சி ஆட்சிக்கு வந்தபோது, கருணாநிதி அவர்கள், செல்வாக்கு நிலைக்கு உயர்ந்தார்.
🌄 1967ல் திமுக கட்சி ஆட்சிக்கு வந்தபோது, முதலமைச்சராக பணியாற்றிய அண்ணாதுரை அவர்கள் திடீர் மரணம் அடைந்ததால், மு.கருணாநிதி அவர்கள் முதல் முறையாக முதல் அமைச்சராக பதவி ஏற்றார்.
ஐந்து முறை முதலமைச்சர் :
🌄 1969-1971 - கா.ந.அண்ணாதுரை மறைவுக்குப் பின் முதல்முறை ஆட்சி, 1971-1976, 1989-1991, 1996-2001, 2006-2011 - ஐந்தாம் முறை ஆட்சி
கலைஞரின் சாதனைகள் துளிகள் :
🌄 கலைஞர் காப்பீட்டு திட்டம்
🌄 ஏழைப் பெண்களுக்கு இலவச திருமண உதவித்திட்டம்
🌄 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்
🌄 அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 30மூ இடஒதுக்கீடு
🌄 உழவர் சந்தை திட்டம்
🌄 போக்குவரத்து ஊழியர்களுக்கு சலுகைகள்
🌄 கலைஞர் வீடு வழங்கும் திட்டம்
🌄 சமச்சீர் கல்வி
🌄 இதுபோல் இன்னும் பல சாதனைகளை புரிந்தவர் கலைஞர் கருணாநிதி அவர்கள்.
தமிழர்களே! தமிழர்களே! நீங்கள் என்னை கடலில் தூக்கி போட்டாலும் கட்டுமரமாகத்தான் மிதப்பேன் அதில் ஏறி நீங்கள் பயணம் செய்யலாம் கவிழ்ந்து விடமாட்டீர்கள்....

Comments
Post a Comment